Tamil Nadu Government Warning: உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 -ன்படி 05.08.2011 முதல் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை திருவள்ளூரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங் கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோடைகாலம் துவங்கிய சூழலில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பலவித குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால் மாநிலம் முழுவதும் சாலையோர மற்றும் நீரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. இத்தருணத்தில், சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திடல் வேண்டும்.
- சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 -ன்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்கவேண்டும், குளிர பானங்கள் மற்றும் பழச்சாறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திடல் வேண்டும்.
- பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. மிக்ஸி போன்ற பிழிப்பான்களை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும். பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள
- பணியாளர் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். இனிப்பு சுவையூட்ட எவ்விதமான வேதிப் பொருட்களையும் சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்குதல் வேண்டும், முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகழி கோப்பைகளில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்கவேண்டும்.
- அடைக்கப்பட்ட குடிநீரை வணிகர்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களின் வாய்ப்புறம் சீலீட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திடல் வேண்டும். மேலும் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் குடிநீர் கொள்கலன்களை சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது.
இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான குளிர்பாணங்கள் மற்றும் பழச்சாறுகளை வழங்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உணவு வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க போதுமான அளவு உடலின் நீர்ச்சத்ததை பராமரித்து உடல் நலனை பேன நீர், மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துதல் மிகவும் நலம் பயக்கும்.
பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை https://fescos.fssai.gov.in என்ற இணையதளத்திலும், 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.comஎன்ற மின்னஞ்சல் மற்றும் TN foodsafety consumer App என்ற கைபேசி செயலி மூலமும் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஏப்ரல் 12ம் தேதி முக்கிய நாள்!
மேலும் படிக்க | ஆதாரைப் போல் அறிமுகமான தேசிய அடையாள எண்..!! யாரெல்லாம் கட்டாயம் பெற வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









