)
Tamil Nadu government free coaching : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன் - போட்டித் தேர்வுப் பிரிவு’ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKNG பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு.உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிக்கப்பட்டது.
இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக "நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 31.05.2025 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAY'S தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.
மாணவர்கள், இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள https://www.raanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, 29.04.2025 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2025 ஆகும்.
முக்கிய நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நேதி - 29.04.2025
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி- 13.05.2025 11.59 P.M
நுழைவுச் சீட்டு வெளியீடு - மே மாதம் மூன்றாம் காரம்
தேர்வு நாள் - 31.05.2025 (10.00 AM-11.00 AM)
அண்மையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்றவர்கள் 57 பேர் இந்திய அளவில் நடத்தப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டுகளையும் தெரிவித்தார். அத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி வகுப்புகளும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்ததுடன் சென்னை ஷெனாய் நகரில் அதற்காக சிறப்பு கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். எனவே, மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ