ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 2, 2025, 06:52 AM IST
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
  • ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடக்கிறதா?
  • வாட்ஸ்அப் எண் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், நியாயவிலைக் கடைகள் சேவைகள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் இலவச வாட்ஸ்அப் எண் மற்றும் தொலைபேசி வழியாக அழைத்து புகார் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் உப்பிடமங்கலம் மற்றும் லிங்கத்தூர் நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Add Zee News as a Preferred Source

இந்த ஆய்வுக்குப் பின் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசின் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்கள் அதிகம் பயனடையக்கூடிய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கக் கூடிய அரிசி, பருப்பு. சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி. அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம், கரூர் வட்டம், உப்பிடமங்கலம் மற்றும் லிங்கத்தூர் நியாய விலைக் கடைகளில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 403 முழுநேரம் மற்றும் 233 பகுதி நேரம் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 636 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், AAY அட்டைகள். சர்க்கரை விருப்ப அட்டைகள். காவலர் அட்டைகள், வன காவலர் அட்டைகள் உள்ளிட்ட 3.37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை. துவரம் பருப்பு. பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள 3.37.531 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 5264.310 மெடன் அரிசி. 435,072 மெடன் சர்க்கரை. 132.934 மெடன் கோதுமை, 24.000 லிட்டர் மண்ணெண்ணெய், 281.532 மெடன் துவரம் பருப்பு மற்றும் 2,85,934 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் தரம், அளவு மற்றும் கடைகள் உரிய நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இலவச சேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 1967 மற்றும் 1800- 425-5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்க 1800-599-5950 மற்றும் 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் தெரிவிக்கலாமென மாவட்ட ஆட்சியர் கூறினார். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அந்தந்த மாவட்ட இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் அரிசி பொருட்களின் தரம் தொடர்பாக புகாரளிக்கலாம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு விண்ணப்பம் : ஆன்லைன் vs ஆஃப்லைன் எதில் கார்டு சீக்கிரம் கிடைக்கும்?

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு! 2 நாட்களில் இதை செய்யாவிட்டால் கார்டு செல்லாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News