எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்..!

Tamil Nadu government : எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பைச் சேர்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 27, 2025, 07:18 AM IST
  • தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
  • எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு குட்நியூஸ்
  • தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படும்
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்..!

Tamil Nadu government Latest Announcement : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் புழங்குடியினர் இனத்தை சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) வழக்கப்படவுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) வழங்கப்படவுள்ளது.

Add Zee News as a Preferred Source

இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம் (System Engineering expertise) புதுமைத் திறன்களை வழங்குதல் மேலும் மின்னணு வடிவமைப்பு (Eclectronics System Design) மற்றும் உற்பத்தி துறை (Manufacturing) தானியங்கி தொழில்துறை (Industrial Automation) இயந்திரவியல் (Robotics) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் (Technology Startup) நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். 

தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் Thermofisher Scientific. Ashok Leyland,GCare India TCS போன்றதனியார் முன்னணி நிறுவனங்களில் Machanical R&D.Graduate Engineer Trainee மற்றும் R & D Business Development போன்ற பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இப்பயிற்சியினை பெற 2022, 2029 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ளவர்களாகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.300 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கால அளவு 10 வாரம் ஆகும். இப்பயிற்சியானது கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சியனை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்(Technology Startups) மின்னனு உற்பத்தி நிறுவனம் {Electronic Manufacturing Company), Mohility and Automative Company ஆகிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,000/- ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ ஏற்கும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி...! எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்... என்ன காரணம்?

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : பெண்களே குட் நியூஸ்! ரூ.1000 -க்கு மாதம் வட்டி பெறலாம் - தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News