)
Tamil Nadu government Liquor Crimes Rehabilitation Assistance : தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி, கள்ளாச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இது தொடர்பான அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும், கள்ளத்தனமாக அயல்நாட்டு மதுபானங்கள், தெளிந்தசாராவி ஆகியவற்றை கடத்துதல் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும், மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களை சுயதொழில்களில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்த நபர் ஒருவருக்கு ரூ.50,000/-மானியமாக வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி இது போன்ற குற்றச்செயல்களில், ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களுக்கு மறுவாழ்வு கடன் வழங்கும் முகாம் திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், மற்றும் நாங்குநேரி வட்டத்தில் வருகின்ற ஜூலை 3 ஆம் தேதியான இன்று காலை 11.00 மணி முதல் மதியம் 3.00 மணிவரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சி சிக்கினால் என்ன ஆகும்?
1. சட்ட விரோதமாக கள்ளச் சாராயங்களை விற்பனைக்காக குப்பியில் அடைப்பது - மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத கடுங்காவல் தண்டனை, ரூ.2 முதல் ரூ.3 லட்சம் அபராதம்
2. 50 லிட்டருக்கு மேல் நூறு லிட்டா் வரை சட்ட விரோதமாக மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து செய்தல் - 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம்.
3. 50 லிட்டா் வரையிலான மதுபானம் வைத்திருத்தல், சட்ட விரோதமாக அருந்துதல், வாங்குதல் அல்லது குற்றம் புரிய பணம் செலவழித்தல், உரிமம் இல்லாத இடங்களில் அருந்த அனுமதி கொடுத்தால் - மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம்.
4. மதுவை உட்கொள்ளச் செய்து இறப்பை ஏற்படுத்தும் குற்றம் - ஆயுள்கால சிறைத் தண்டனை, ரூ.10 லட்சத்துக்குக் குறையாத அபராதம்.
5. மதுபானம் மூலம் இறப்பை ஏற்படுத்தாத பிற பாதிப்புகளை உருவாக்கும் குற்றம் - 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் அபராதம்.
6. மனிதா்கள் அருந்துவதற்கு ஏற்ற வகையில் இயல்பு நிலையில் இருந்து மாற்றப்பட்ட சாராயமாக மாற்றுதல் அல்லது மாற்ற முயற்சிக்கும் குற்றச் செயல் - 3 முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம்.
7. மதுபானம் தொடா்பான விளம்பரங்களைச் செய்யும் குற்றச் செயல் - புதிய தண்டனை: இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரையில் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ