இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

Tamil Nadu government : இளைஞர்கள் யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசே வழிகாட்டல்களை வழங்குகிறது. அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 29, 2025, 12:01 PM IST
  • தமிழ்நாடு அரசு யூடியூப் பயிற்சி
  • ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது
  • முன்பதிவு செய்தால் கலந்து கொள்ளலாம்
இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

Tamil Nadu government, YouTube channel training : தமிழ்நாடு அரசு இளம் தலைமுறையினருக்கு தேவையான தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும், அதற்கு தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதன் வழியாகவும் சம்பாதிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு புதிதாக யூ  டியூப் சேனல் தொடங்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசே யூடியூப் சேனல் எப்படி தொடங்க வேண்டும்? அதற்கு என்னென்ன தேவை என்பது குறித்த வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்குகிறது. இதில் எப்படி கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

யூடியூப் பயிற்சி வகுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் 'சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்' தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

"சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றும் விதிகள்

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண் திருநங்கைகள்)18 வயதிற்கு மேற்பட்ட குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. தொலைபேசி எண் ; 936022128 / 9543773337, முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை: பெண்களே குட் நியூஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு! 2 நாட்களில் இதை செய்யாவிட்டால் கார்டு செல்லாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News