Tamil Nadu Government : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக, பிரதமர் மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்று, மத்திய அரசின் சான்றிதழைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பாக இது அமையும்.
தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கான வாய்ப்பு
தென்காசி மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தின் ஏற்பாட்டில், மார்ச் 09.03.2026 திங்கட்கிழமை அன்று தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் ஐடிஐ ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் தகுதியான நபர்களுக்குப் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உரிய உதவித்தொகை வழங்கப்படுவதோடு, மத்திய அரசின் நேஷனல் அப்ரன்டீஸ் சான்றிதழும் (NAC) வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்ட அப்ரன்டீஸ் மேளா
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் அதே மார்ச் 9-ஆம் தேதியன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் நடத்தப்பட உள்ளது. ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் இதில் நேரில் கலந்துகொள்ளலாம். இந்த முகாம் மூலம் இளைஞர்கள் நேரடியாகத் தொழில் நிறுவனங்களில் அப்ரன்டீஸாக இணைந்து பணி அனுபவத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட சேர்க்கை முகாம் மற்றும் சலுகைகள்
தர்மபுரி (கடத்தூர்) அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில், முன்னணி தனியார் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இங்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு (BE, BSc, BCom போன்றவை) முடித்தவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். இப்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.14,000 முதல் ரூ.20,000 வரை நிறுவனங்களால் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், பயிற்சி முடிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஒரு வருடம் சலுகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்
ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களுடன் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்குத் தென்காசி (04633-298088), திருவாரூர் (04366-227411) மற்றும் தர்மபுரி (94422-86874) மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | விடியல் பயண திட்டம் : பெண்களுக்கான இலவச பயணம் - 10 முக்கிய தகவல்கள்
மேலும் படிக்க | பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.2 லட்சம் மானியம் கொடுத்த முதலமைச்சர்
மேலும் படிக்க | சொந்த தொழில் தொடங்க ஜாக்பாட் வாய்ப்பு! தமிழ்நாடு அரசு கொடுக்கும் பயிற்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









