Tamilnadu Government Good News : தமிழ்நாடு முழுவதும் புதிய வீடு கட்டுப்பவர்கள் அனுமதி பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய வீடு கட்டுப்பவர்கள் பெற வேண்டிய அனுமதி, அனுமதிக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஊரகப் பகுதிகளில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி (SELF CERTIFICATION) பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 2000 சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பில் 31000 சதுர அடி வரை தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தனம் கொண்ட 2 குடியிருப்பு வரை உள்ள கட்டிடங்களுக்கு web portal : https://onlineppa.in.gov.in என்ற இணையதளம் முகவரியில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அணைத்து கிராம ஊராட்சிகளிலும் SELF CERTIFICATION நடைமுறைப்படுத்த வேண்டுமென என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
.
சுயசான்று நடைமுறையின் நோக்கங்கள் ;
1. குடியிருப்பு கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துதல்.
2. கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல்
3. கட்டிடத் திட்ட அனுமதிக்கான கட்டணத்தைச் செலுத்துவதை எளிதாக்குதல்,
4. ஒப்புதலுக்குப் பிந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளுதல்
5. கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதில் இடைத்தரகர்களைத் தமிர்த்தல்மற்றும் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து சுய சான்று மூலம் அனுமதி பெறுதல்,
பின்வரும் 5 முக்கிய ஆவணங்களை சமர்பிப்பதன் மூலம் சுயசான்று கட்டட அனுமதி பெறுவதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது;
1. பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிடப்பட்ட திட்ட வரைபடம் (PDF வடிவத்தில்)
2. விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (Registered Sale Deed in favour of the applicant)
3. விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா in favour of thearylicant)
4. அங்கேரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவண(Approval Layout Document)
5. தள புகைப்படம். (Site Site Photograph
சுய சான்று கட்டிட அனுமதி வழங்கிடும் பொருட்டு ஊராட்சிகளை வகைப்பாடு செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படுள்ளது. மேற்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் web portal : https://onlineppa.in.gov.in என்ற இணையதளம் முகவரியில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றின் அடிப்படையில் கட்டிட அனுமதி SELF CERTIFICATION) பெற்றுகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்களா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.
மேலும் படிக்க | ரூ. 80,000 மாத சம்பளம்! டிகிரி இருந்தால் மட்டும் போதும் - விண்ணப்பிக்க கடைசி தேதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ