)
Tamil Nadu Govt, Diwali Bonus 2025: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் அனைத்து துறை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024– 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex- gratia) 2025-2026-இல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ. 44 கோடியே 11 இலட்சம் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
பால்வளத்துறை போனஸ்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் 3,258 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 16 ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 விழுக்காடு மற்றும் 11.67 விழுக்காடு கருணை தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை, அக்டோபர் 16 ஆம் தேதியன்று சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தின் அலுவலகக் கூட்டரங்கில் C மற்றும் D தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் 3,258 பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான ரூ.4.74 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையினை வழங்கிடும் வகையில் 18 பணியாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்
இதேபோல், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்க டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. 24,816 பேருக்கு போனஸ் வழங்க 40.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ