மாணவர்களிடையே சாதி, மத மோதலை தடுக்க பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Nadu school guidelines : அனைத்து பள்ளிகளிலும் சாதி, மத மோதலை தடுக்கவும், மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்கபகும் வகையிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 28, 2025, 01:34 PM IST
  • தமிழ்நாடு பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
  • சாதி மத மோதலை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
  • மாணவர்களிடையே வேறுபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாணவர்களிடையே சாதி, மத மோதலை தடுக்க பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Nadu school guidelines : பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாகுவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பது மிக இன்றியமையாதது. எனவே ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தின் இலக்காக சாதி/சமூக வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு.

Add Zee News as a Preferred Source

5 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் ஒரு நன்னெறி வகுப்பு அனைத்து
வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாட வேளைகளில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருக்குறளினைப் பொருளுடன் ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். திருக்குறளின் கருத்துக்கள் மாணவர்களின் உள்ளங்களில் ஆழமாக ஊன்றிடவும் நடத்தையில் வெளிப்படுத்திட தக்க வகையில் கதை, கவிதை, நாடகம், வினாடி வினா உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் முறைக்கு வலுவூட்ட வேண்டும். நன்னெறி வகுப்பில் மாணவர்களை குழுவாக செயல்பாடுகள் வழங்கி குறிப்பாக கவனம் தேவைப்படும் மாணவர்கள் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்த தவறாமல் ஆசிரியர்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி சார் செயல்பாடுகளை ஊக்குவிக்க இலக்கியம், கவின்கலை, சூழலியல், இலக்கிய மன்றம், வினாடி வினா, நூலகச் செயல்பாடுகள், வானவில் மன்றம், போதை எதிர்ப்பு மன்றம் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு அனைத்து மாணவர்களும் வேறுபாடின்றி பங்கேற்க செய்தல் வேண்டும்.

அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும் ஊழியர்களும் சமூகப் பிரச்சினைகள், சாதி பாகுபாடு மற்றும் பாலியல் வன்முறை பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள். ராகிங் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பல்வேறு சட்டங்கள் தொடர்பாக தாங்களும் தலைமை ஆசிரியர் நடத்தும் கூட்டத்தில் கலந்தாலோசித்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்குவதற்கு திட்டமிடல் வேண்டும். அவ்வப்போது பள்ளிக் கல்வி இயக்கத்திலிருந்து வழங்கப்படும் ஆணைகளின் அடிப்படையில் இச்செயல்பாடுகளை நன்கு திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும். 

ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு உயரத்திற் கேற்பவும் அவ்வப்போது மாற்றி அமைத்து அமரச்செய்தல் வேண்டும். உடல் ஊனமுற்ற மாணவர் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை வரிசையிலும் மாற்றி அமரச் செய்தல் வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்களை மந்தனமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த
நெடுவரிசையோ அல்வது விவரங்களோ இருக்கக்கூடாது. எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்வது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்குக் காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்கவோ கூடாது.

மாணவர்கள் வண்ண மணிக்கட்டுபட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதைத் தடைசெய்வதோடு அவற்றை அணிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோர் அல்வது பாதுகாவலர்களுக்கு அவ்வப்போது வழங்கிட தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சாதி ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் அணுகக் கூடிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தக்க வழிக்காட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடல் வேண்டும். பள்ளி வளாகங்களில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதை தடை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மேலும் படிங்க: அரசு பள்ளிகளில் வரும் புதிய திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

* ராகிங், போதைப் பொருள் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் சாதி பாகுபாடு, கருத்து வேறுபாடு தொடர்பான தவறுகள்/குற்றச் செயல்பாடுகள் தொடர்பாக மாணவர்களின் செயல்பாடை கண்காணித்து பல்வேறு கல்வி சார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளின் பொறுப்பு ஆசிரியர்கள்/வகுப்பு ஆசிரியர் ஆகியோர் ஒருங்கிணைந்து விவரங்களை ஆய்வு செய்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். 

விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் Chid Helpihe 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் மற்றும் பாலியல் குற்றங்கள் பற்றி குழந்தைகள் புகார் அளித்தாலோ அல்வது பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தாலோ, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளித்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். 

புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு. அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக்கூடாது என்பது முக்கியமாகையால், அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது.

மாணவர்களிடையே சாதிபாகுபாடு பிரச்சனைகளை தீர்க்க முதன்மைக் கல்வி அலுவலர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தவ அலுவலர். மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைத்தல் வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிமை முற்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும்
சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை ஏற்படும் நிகழ்வுகள் பாவியல் வன்கொடுமை, விபத்துக்கள், உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும். 

மாணவர்களிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை மற்றும் வன்முறை எண்ணங்களை நீக்குவதற்காக தேவைப்படும் நடவடிக்கையை ஒருங்கிணைத்து செயல்பட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க: திமுக கூட்டணியில் பாமக..? செல்வப்பெருந்தகை பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News