)
Tamilnadu Goverment IT Job Training, Vettri Nichayam scheme : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து, "வெற்றி நிச்சயம்" திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்த திட்டம் மூலம், 21 முதல் 25 வயதுக்குள் உள்ள 20,000 வேலைத்தேடும் இளைஞர்கள் தொழில்துறை சார்ந்த மேம்பட்ட திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழ்நாடு, குறிப்பாக சென்னை, இந்தியாவின் ஐடி துறையின் முக்கிய மையமாக வளர்ந்துள்ளது. இந்தத் துறையில் தற்போது பத்து லட்சத்த்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கு, தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் பின்வரும் துறைகளில் வழங்கப்படவுள்ளது:
- Networking and Cybersecurity Essentials (CISCO)
- Microsoft Power BI Data Analytics
- Microsoft Azure Artificial Intelligence Engineer
- Robotic Process Automation (UiPath)
- Salesforce Platform Developer
- Salesforce Administrator
- Google Cloud Engineer
- MongoDB Associate Developer
- Premier Banker
- Angular JS
- J2EE Programming
- Asp.Net Programming
- Advanced Python Programming
- Data Analytics using Python
- Digital Marketing
இப்பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
பயிற்சிக்கான தகுதி:
1. 2022 முதல் 2025 கல்வியாண்டில் CSE, ECE, EEE ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்ற பொறியியல் மாணவர்கள் (அரியர்ஸ் இல்லாமல்).
2. BCA, B.Sc. CS, MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை/அறிவியல் பட்டதாரிகள் (அரியர்ஸ் இல்லாமல்).
3. வேலைக்காக இடமாற்றம் செய்ய தயாராக இருத்தல் வேண்டும்.
"வெற்றி நிச்சயம்" திட்டம் சவால் நிறைந்த தொழில் நுட்ப துறையில் திறமையான இளைஞர்களை உருவாக்கி தமிழ்நாட்டை இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக மாற்றும் ஒரு சீரிய திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விருப்பம் உடையவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet என்ற இணையத்தளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள "வெற்றி நிச்சயம்" செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளை நடத்துதல் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைநாடுநர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்கும், நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும் தேவைப்படும் திறன்களை பெறுவதற்கு ஏதுவாக "Workshop on Pre Job Skils" என்ற தலைப்பில் உரிய அனுபவமிக்க நிபுணர்கள் / வல்லுநர்கள் (Experts) கொண்டு 09.08.2025 (சனி) மற்றும் 10.08.2025 (ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் (காலை 9.30 மு.ப முதல் 5.30 பி.ப வரை) பயிலரங்கமாக(Two Days Workshop) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிலரங்கத்தின் இரண்டாவது நாள் (10.08.2025) பிற்பகலில் (2 p.m. 5 p.m.) இத்துறை சார்ந்த ஒரு அலுவலர் மற்றும் இரு மனிதவள நிபுணர்களைக் கொண்டு (Two Senior HR Professionals + Officers From Employment Department) மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இப்பயிலரங்கத்தில் நேரடியாக கலந்து கொள்ள விருப்பமுடைய வேலைநாடுநர்கள் பின்வரும் படிவத்தினை (Google form) பூர்த்தி செய்து, இப்பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Google Form link: https://forms.gle/PwA8iyKATNcRd1Vj9
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ