Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு எல்லாமே இலவசமாக கொடுத்து ஓராண்டு பயிற்சியும் கொடுக்கிறது. இந்த பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையாக முழுநேரம் படிப்பவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் ரூபாயும், பகுதிநேரமாக பயிற்சி எடுப்பவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்படுகிறது. திருக்கோயில்களில் சாதி பாகுபாடுகளை களையும் வகையில் அரசு இந்த முன்மாதிரியான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, "அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக இந்த ஆண்டு முதல் ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் உயர்த்தபட்ட ஊக்கத்தொகையை அர்ச்சகர் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். எனவே, திருக்கோயில்களில் பணியாற்ற விரும்புபவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் உட்பட திருக்கோயில் சார்ந்த பணிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அர்ச்சகர் பயிற்சி குறித்த கூடுதல் தகவல்கள்
* ஓராண்டு சான்றிதழ் படிப்பு - சைவ – வைணவ பயிற்சி
* சைவ-வைணவ முறைப்படி தமிழிலும், ஆகமத்திலும் முழுமையாக கற்றுத் தரப்படும்.
* ஆண், பெண் பாலின பாகுபாடின்றி அனைவரும் இந்த பயிற்சித் திட்டத்தில் சேரலாம்.
* இந்து சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
* எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* வயது வரம்பு 14 வயது முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
* பயிற்சி காலம் - ஓராண்டு காலம் மட்டும்
* ஒவ்வொரு மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10,000/ விகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* உணவு உடை தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி திருக்கோயில் மூலம் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும்.
* சைவ & வைணவ பயிற்சி பெரும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும்.
* மாணவர்களின் தேர்வும் எண்ணிக்கையும் தேர்வுக்குழுவின் முடிவிற்குட்பட்டது.
* சைவ வைணவ பயிற்சி நிலையத்தில் பயில விருப்பமுள்ளவர்கள் இங்கு சைவ வைணவ சமய கோட்பாட்டுகளை கடைப்பிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். திருக்கோயில் உள்ள இணையதள பக்கத்திலும் அல்லது இந்துசமய அறநிலையத்துறை இணையபக்கம் : https://hrce.tn.gov.in -திலும் அறிந்து கொள்ளுங்கள். Free Call : 18004251757.

கோயில் பயிற்சி பள்ளிகள்
1. மதுரை மாவட்டம், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
2. திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
3. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
4. திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்)
5. சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்),
6. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்காநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
7. திருவள்ளுர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
8. நாமக்கல் மாவட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
கூடுதல் தகவல்களுக்கு - இந்துசமய அறநிலையத்துறை Website : https://hrce.tn.gov.in / Free Call : 18004251757. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க | பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? அரசின் முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க: மீண்டும் உருவாகும் 'புயல்'.. பிச்சு உதறபோகும் மழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய பாயிண்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









