யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு - விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்விற்கு பயிற்சி பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 13, 2025, 01:31 PM IST
  • யுபிஎஸ்சி தேர்வு ஊக்கத்தொகை அறிவிப்பு
  • தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கவும்
  • மாதம் ரூ.50 ஆயிரம் உங்களுக்கு கிடைக்கும்
யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு - விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Add Zee News as a Preferred Source

நான் முதல்வன் திட்டம் ஊக்கத்தொகை

இந்நிலையில் 2025-2026- க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது எனவும், இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி

இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 659 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. தற்போது, (11.11.2025) யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 87 பேர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.பி.எஸ்.சி தேர்வு - ஊக்கத்தொகை பெற விண்ணபிப்பது எப்படி?

இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான பயிற்சி பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50,000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என்ற https://naanmudhalvan.tn.gov.in/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 13.11. 2025 முதல் 24.11. 2025 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

மத்திய அரசு  பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இணைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு நான்  முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி,  ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதற்காக ஊக்கத்தொகையும் வழங்குகிறது.  எனவே, மாணவ, மாணவிகள் இத்திட்டம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்திக் கொள்ளவும்

மேலும் படிக்க | சென்னை மெட்ரோ: வருகிறது சுரங்கப் பாதைக்கு அடியில் இன்னொரு சுரங்கம் - இது எப்படி சாத்தியம்?

மேலும் படிக்க | 1 ரூபாயில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் செல்லலாம்... Chennai One கொடுக்கும் பெரிய ஆப்பர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News