அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 29, 2025, 11:37 AM IST
  • கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை
  • உயர்கல்வித்துறை வெப்சைட்டில் பிரச்சனையா?
  • தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் தெளிவான விளக்கம்
அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து அரசு கலை அறிவியில் கல்லூரி, தொழில் படிப்புகள், தொழிற் பயிற்சி மையங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்லூரிகளிலும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பாக கலை அறிவியல் கல்லூரிகளில் நடக்கும் மாணவர் சேர்க்கை பொறுத்தவரை, இந்த ஆண்டு மாணவர்கள் உயர்கல்வித்துறை இணையதளத்திலேயே விருப்பமான கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக அரசு சார்பில் பிரத்யேகமான இணையதளமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இணையதள முகவரில் குறைபாடுகள் இருப்பதாக செய்தி பரவியது, இதற்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை கொடுத்திருக்கும் விளக்கம் பின்வருமாறு : தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025- 2026 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான இணையவழி விண்ணப்பப் பதிவு, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tngasa.in என்ற முகவரியின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த இணையவழி விண்ணப்ப பதிவு 07.05.2025 அன்று தொடங்கி எவ்வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. 

இதுவரை இந்த இணையதளத்தில் மொத்தமாக 2,07,915 மாணவர்கள் எந்தவித இடர்பாடுகளும் இன்றி இணையவழியாக விண்ணப்பித்துள்ளனர். இதில், இதுவரை 81,923 மாணவர்கள் வெற்றிகரமாக சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை செயல்முறைகள் நடைபெறுகின்றன. மேலும், முதுநிலை மற்றும் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப்பதிவும் தற்போது இந்த இணையதளத்தின் மூலமே தொடங்கப்பட்டு மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். 

சில செய்திகளில் வெளிவந்துள்ள செய்திபோல் இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. www.tngasa.in என்ற இணையதளதில் மட்டும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tndce.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் சென்று இந்த மாணவர் சேர்க்கை www.tngasa.in என்ற இணையதளத்தை சென்றடையலாம். எனவே, செய்திதாளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இன்டர்வியூ மட்டும்.. தேர்வு கிடையாது! ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கான வேலை -அரசு அறிவிப்பு

மேலும் படிக்க | வேலைவாய்ப்பு! அரசு பள்ளிகளில் பணியாற்ற விருப்பமா? - உடனே விண்ணப்பிக்கவும்

மேலும் படிக்க | தமிழக அரசின் இலவச பயிற்சிகள்... படித்தால் வேலைவாய்ப்பு உறுதி - விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் படிக்க | இளைஞர்கள் கவனத்திற்கு... தமிழ்நாடு அரசின் இலவச வேலைவாய்ப்பு முகாம் - உடனே பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News