தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு மாதந்தோறும் வழங்கும் 8000 ரூபாய் உதவித்தொகை பெற தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2025, 08:01 AM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்
  • நாகப்பட்டினம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம் மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய்  வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

தகைமைமேல் தகைமையாக அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர் அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2025-2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், "தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.” என அறிவித்தார்.

விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

இந்த அறிவிப்பிற்கிணங்க அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வாணையின்படி அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-2026ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் (tamilvalarchithurai.org/agavai/) என்ற வலைதளம் வாயிலாகவும், மூல விண்ணப்பம் நேரிலும் வரவேற்கப்படுகின்றன.

யார் விண்ணப்பிக்க முடியாது?

மகளிர் உரிமைத் தொகை சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பிக்கத் தகுதிகள்: 

1) 01.01.2025ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 
2) ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்), 
3)தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. 
4) தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 
5) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டில / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/ உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட மூலவிண்ணப்பத்தை நேரிலும் tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்வது கட்டாயமாகும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர் கூறியதுபோல் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7500/-ம் மருத்துவப்படி ரூ.500/-ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நீலகிரி, நாகப்பட்டினம்

படிவத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 17.11.2025க்குள் அளிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithurai.org

மேலும் படிக்க | தீபாவளி பண்டிகை : பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

மேலும் படிக்க | மாதம் ரூ.8000 பென்சன் பெற விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகையை வைத்து ஏமாற்றுகிறீர்களா...? - நயினார் நாகேந்திரன் கிடுக்குப்பிடி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News