)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சுய தொழில் தொடங்க மானியம், சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம், மகளிர் சுய உதவிக் குழு மூலம் பெண்களுக்கு கடன் பெறும் வசதி என்பது உள்ளிட்ட மூன்று அறிவிப்புகள் இப்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்புகளின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
செங்கல்பட்டு - ரூ.5 லட்சம் மானியம் திட்டம்
தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.5..00 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 5 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரசு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச வயரிங் பயிற்சி மற்றும் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சிக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான தொழில்முனைவோர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல நபர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்முனைவோராக மாறவும் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
இப்பயிற்சி நிறுவனத்தில் அடுத்ததாக வீடு முதல் வணிக வளாகம் வரை முழுமையான வயரிங் பயிற்சி (30 நாட்கள்) மற்றும் இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல் பயிற்சி (30 நாட்கள்) நடைபெறவுள்ளது. இதற்கான நேர்காணல் 22.10.2025 மற்றும் 23.10.2025 தேதிகளில் நடைபெறும். இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் 46 A/D முத்தையா இல்லம், பெரியார் நகர், மாடூர் சுங்கச்சாவடி அருகில் கள்ளக்குறிச்சி - 606 262 என்ற இடத்தில் நடைபெறும். அலுவலக நேரம் காலை 09.30 முதல் மாலை 05.30 வரை.
தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 04151- 225544/ 7339414616 ஆகும். இப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி காலங்களில் மதிய உணவு, காலை மாலை தேநீர், வழங்கப்படும். வங்கி கடன்கள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். இப்பயிற்சிகளுக்கான தகுதிகள் 18 முதல் 45 வயதுடையவர்கள் கலந்துகொள்ளலாம். குறைந்த பட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். கிராமபுறத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கான சான்றிதழ் (இந்தியன் வங்கி மற்றும் மத்திய ஊரக வளர்ச்சி துறையால் பயிற்சிக்கான இரண்டு சான்றிதழ்கள்) வழங்கப்படும்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025-2026 நிதியாண்டிற்க்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் அதற்கான முன்பதிவு செய்து கொள்ளவும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காரைக்குடி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் AAP-2025-26 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சிறுதானிய சிற்றுண்டி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்படவுள்ளது.
எனவே, சிறுதாணிய சிற்றுண்டி உணவகம் நடத்திட காரைக்குடி, அரசு மருத்துவமனையிலிருந்து 5 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சிகளைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்க விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள்/ கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் SHG/PLF/Cluster தரமதிப்பீட்டில் A or B தரம் பெற்றவராகவும், உணவகம் அமைத்து அனுபவம் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் / கூட்டமைப்புகள் / தொகுப்புகளிலிருந்து குறைந்தபட்சம் 6 முதல் 8 நபர்கள் சிறுதானிய உணவகம் நடத்த தன்னார்வத் தொண்டு செய்ய தயாராகவும், உணவு தொடர்பான நிறுவனங்களை உருவாக்குவதில் அல்லது நடத்துவதில் குழு/கூட்டமைப்பு/தொகுப்பு முன் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். எனவே, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைத்திட மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுயஉதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் தங்களது சுய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை (ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம் முகவரியில் வருகின்ற 22.10.2025 அன்று
மாலை 05.00 மணிக்குள் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ