)
Ration Card : தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு மற்றும் பொதுவிநியோக திட்ட குறைகளை தீர்ப்பதற்காக மாதந்தோறும் சிறப்பு குறைதீர் முகாம்களை நடத்துகிறது. இது தொடர்பான அறிவிப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் இருந்து வெளியாகும். அந்தவகையில் மூன்று மாவட்ட மக்கள் ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான தேதி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த முகாமில் பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
பொது விநியோகத்திட்டம் சிறப்பாக விநியோகத்திட்டத்தின் கீழ் ஆகஸ்ட்-2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் 09.08.2025 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
எங்கு நடக்கிறது?
தூத்துக்குடி, திருபத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் 9 ஆம் தேதி நடக்கிறதா? என்பதை விசாரித்து தெரிந்து கொண்டு பிறகு செல்லவும்.
என்னென்ன புகார்கள் தெரிவிக்கலாம்?
இந்த குறைதீர்வு முகாம் நடைபெறும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், நியாயவிலை கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்ற கோரிக்கைகளை நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்து குறைகளை தீர்வு செய்து பயன் பெறுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ