Tamil Nadu Govt Update: தமிழ்நாடு அரசு மாநிலம் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையத்தை நடத்தி வருகிறது. இதில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் ஆலோசனையும் இம்மையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை குழந்தைகள் மையத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அப்படி சேர்க்கும் குழந்தைகளுக்கு அம்மையத்திலேயே ஆதார் அட்டையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை அம்மாவட்ட மக்களுக்கு வெளியிட்டுள்ளார். அதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு நமது மாவட்டத்தில் செயல்படும் 492 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல் கதை,விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.
குழந்தைகள் மையத்தில் சேர்க்கை
இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. மேலும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப் படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆதார் கொடுக்கப்படும்
எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜீன் 2025-ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைப்பெற்று வருவதால், அச்சேவையையும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
இதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு நமது மாவட்டத்தில் செயல்படும் 633 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக்கல்வி போன்றவை வழங்கப்படுகின்றது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல் கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச்செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜீன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | 2026 தேர்தல்: மதுரையில் தவெக தலைவர் விஜய் போட்டியா? வெளியான சூசக தகவல்!
மேலும் படிக்க | சென்னை அரசு கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு விருப்பமா? உங்களுக்கான முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ