ஆடு, மாடு பண்ணை அமைக்கு சூப்பர் வாய்ப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த லேட்டஸ்ட் குட்நியூஸ்

Tamil Nadu livestock farm subsidy : ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 30, 2025, 07:59 AM IST
  • கால்நடை பண்ணை அமைக்கும் திட்டம்
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பு
  • கடனுதவி மற்றும் மானியம் கிடைக்கும்
ஆடு, மாடு பண்ணை அமைக்கு சூப்பர் வாய்ப்பு - தமிழ்நாடு அரசு கொடுத்த லேட்டஸ்ட் குட்நியூஸ்

Tamil Nadu Government livestock farm subsidy : தமிழ்நாடு அரசு கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகிறது. அதற்காக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பண்ணை அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க ஊக்குவித்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்கள், https://www.trilda.tn.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இப்போது அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், : தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய கால்நடைப்பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது.

புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதின்வழி மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு. தீவன விதைகள் உற்பத்தி, கோழிவளர்ப்பு. செம்மறியாடு வளர்ப்பு. வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில்முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 இலட்சம் வரையும், செம்மறியாடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.50.00 இலட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15.00 இலட்சம் முதல் ரூ.30.00 இலட்சம் வரையும் வைக்கோல் ஊறுகாய்ப்புல், மொத்த்த கலப்பு உணவு (TMR) தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள்(JLG), பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்கள் https://nim.uclyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை https://www.trilda.tn.gov.in/ என்கிற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் https://www.trilda.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

தேவையான விரிவான திட்ட மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவர்கள். கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களை தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன், மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - உடனே விண்ணப்பிக்கவும்

மேலும் படிக்க | Business Idea: கோழி பண்ணை தொடங்கினால் இவ்வளவு லாபம் பார்க்கலாமா? இந்த ஐடியா நல்லா இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News