Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் ’உழவன் இ - வாடகை செயலி’ மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இந்த செயலி மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் டிராக்டர் உள்ளிட்ட உபகரணங்களை 4 ஆயிரம் விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திவருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக குறைந்தவாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள், வீட்டிலிருந்த படியே முன்பதிவு செய்ய உழவன் செயலி இ வாடகை -யை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் விவசாயி பெருமக்கள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வீட்டிலிருந்தே உழவன் செயலி - வாடகை மூலம் முன் பணம் செலுத்தி வாடகைக்கு முன்பதிவு செய்யலாம். டிராக்டர், மினி டிராக்டர் இயந்திரத்திற்கு குறைந்தது 2 மணி நேரமும் அதிக பட்சமாக 20 மணி நேரமும், நெல் அறுவடை இயந்திரத்திற்கு குறைந்தது 1 மணி நேரமும் அதிகபட்சமாக 20 மணி நேரம் வரை முன் பணம் செலுத்தி வாடகைக்கு பெறலாம்.
’உழவன் இ - வாடகை செயலி’ - வாடகை செலுத்தும் முறை
பணத்தை UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி ஒப்புகை சீட்டையும் முன் பதிவு செய்த வேளாண் இயந்திரங்கள் விவரத்தையும் அறியலாம்.விவசாயிகள் இயந்திர வாடகையினை வாடகைக்கு தேவைப்படும் குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள்ளும் முன் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் முன்பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்படாத வாடகை தொகையினை பெற்றிட சம்பந்தப்பட்ட உபகோட்ட அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும்.
’உழவன் இ - வாடகை செயலி’ - என்னென்ன பொருட்கள் வாடகைக்கு கிடைக்கும்?
விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய டிராக்டர், டிராக் வகை நெல் அறுவடை இயந்திரங்கள், சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டரால் இயக்கக் கூடிய வைக்கோல் களைத்திடும் கருவி, டிராக்டர் ட்ரெய்லர் எண், நிலக்கடலை செடி பிடுங்கும் கருவி, கொத்து கலப்பைகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
வாடகை எவ்வளவு?
டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளுக்கும் டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு குறைந்த வாடகையாக ரூ.500/- சக்கர வகை நெல் அறுவடை இயந்திரத்திற்கு 1 மணிநேரத்திற்கு ரூ.1160/- டிராக் வகை நெல் அறுவடை இயந்திரத்திற்கு 1 மணிநேரத்திற்கு ரூ.1880/- வீதத்தில் குறைந்த வாடகை
அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. வாடகை விவரத்தை மட்டும் வேளாண்மை துறை அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால், வாடகை விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு.
மேலும் படிக்க | யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு - விண்ணப்பிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









