சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளையாட்டு மைதானங்களை பார்வையிட்டு, மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நாட்டு வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் :- கல்வி மட்டும்தான் நம்மிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத செல்வம் என்பதை சொல்லி வரும் தமிழக முதல்வர் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் பெற்றிருக்கிற வளர்ச்சியை இன்றைக்கு அண்டையா மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூட பாராட்டுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
இந்திய அளவில் உயர் கல்வி சேர்வதற்கான எண்ணிக்கை 29 சதவீதமாக உள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் 53% ஆக இருக்கிறது. காரணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாணவர்களில் புதுமைப்பெண், தமிழ்புதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி வளர்ச்சி இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
எம்.எஸ்.தோனி என்பவர் உலக அளவிலான சிறந்த சாதனையாளர், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இன்றைக்கு மிகப்பெரிய சாதனையாளராக வளர்ந்திருப்பவர். அவரை பங்குதாரராக கொண்டு செயல்படும் இந்த பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவிலான நாம் சாதனையாளராக மாற வேண்டும் என்ற எண்ண ஓட்டம் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
உடன் புனித தோமையர்மாலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
மேலும் படிக்க | விஜய் கைது செய்யப்படுவாரா...? டக்குனு துரைமுருகன் சொல்லிய பதில் - என்ன தெரியுமா?
மேலும் படிக்க | ஹெச். ராஜா பார்வையில் குறைபாடு, செந்தில் பாலாஜி கொடூரமானவர் இல்லை - டிடிவி தினகரன்
மேலும் படிக்க | கரூர் துயர சம்பவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









