Tamil Nadu Highways Recruitment 2025: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. துறை வாரியாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த பணிக்காக கூடுதல் விவரங்களை பார்ப்போம்.
பணி விவரம்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாவட்ட வாரியாக இதற்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதாவது, ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, கோவையில் 18 இடங்களும், தஞ்சாவூரில் 31 இடங்களும், வேலூரில் 5 இடங்களும், கடலூரில் 9 இடங்களும், திருப்பூர், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடங்களும், திருச்சியில் 8 இடங்களும், தூத்துக்குடியில் 2 இடங்களும், நாகர்கோவிலில் 5 இடங்களும் என மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர், அலுவலக காவலர், ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். மேலும், இதில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு இரண்டு ஆண்டுகள் கனரக வாகனங்களை இயக்கி அனுபவச் சான்று இருக்க வேண்டும். 01.07.2025 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
அலுவலக உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும். அலுவலக காவலர் ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.5,700 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு நடைபெறும்
நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அலுவலக காவலர், ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் பணிநியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
இப்பணி நியமத்தினரை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் அதிகாரம் கண்காணிப்பு பொறியாளருக்கு உண்டு என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நிரப்பி, தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அந்தந்த மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க
மேலும் படிக்க: வெளுக்கப்போகுது கனமழை.. தென்மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. வானிலை அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









