)
Ration Card : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடும்பம் இன்றி தனியாக வசிப்பவர்கள் கூட ரேஷன் கார்டு பெற முடியும். இவர்களும் மற்றவர்களைப் போலவே புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து புதிய ரேஷன் கார்டு வழங்கும். ஆனால், தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது என்பது எளிதான காரியமல்ல. மற்றவர்கள் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கும் ஆவணங்களைக் காட்டிலும் 2 கூடுதலான ஆவணங்களை தனிநபர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
பொதுவாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணபிப்பவர்கள் குடும்பத்தினரின் ஆதார் கார்டு, வீட்டு வரி ரசீது, மின் கட்டண பில், புகைப்படம், ஒருவேளை வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். அதேபோலவே தனிநபராக இருப்பவர்கள் இந்த சான்றுகளுடன், தனிநபராக வசிக்கிறேன் என்பதற்கான சான்றை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற வேண்டும், அதன்பிறகு நோட்டரி வழக்கறிஞரிடம் உறுதி மொழி பத்திரம் வாங்கி இணைக்க வேண்டும். மற்ற ஆவணங்களுடன் இந்த இரண்டு ஆவணங்களையும் சேர்த்து விண்ணப்பித்தால் மட்டுமே தனிநபர் ரேஷன் கார்டு கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
தனிநபர் ரேஷன் கார்டு விண்ணப்பத்திற்கு, சில முக்கிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் தேவை. அவை பின்வருமாறு:
"குடும்பத்தில் யாருமில்லை" சான்றிதழ்: நீங்கள் தனியாக வசிப்பதை உறுதிப்படுத்த, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து "No Family Certificate" பெற வேண்டும். இது நீங்கள் ஒரு குடும்பத்தின் பகுதியாக இல்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றாகும்.
பிரமாணப் பத்திரம் (Affidavit): நீங்கள் தனியாக வசிப்பதாக ஒரு நோட்டரி வழக்கறிஞரால் கையொப்பமிடப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணம் ரூ. 10 அல்லது ரூ. 20 மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் தயார் செய்யப்பட வேண்டும்.
முக்கிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் முகவரி சான்று.
- பான் கார்டு அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற வயது சான்று.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் கடிதம்:
- ரேஷன் கார்டு விண்ணப்பப் படிவத்தை தாலுகா அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.
- ஏன் தனியாக வசிக்கிறீர்கள் என்பதை விளக்கி ஒரு கடிதம் (Cover Letter) இணைக்க வேண்டும்.
பிரமாணப் பத்திரத்தில் என்ன எழுத வேண்டும்?
பிரமாணப் பத்திரத்தில் பின்வரும் தகவல்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்:
- உங்கள் பெயர், வயது, மற்றும் தந்தை அல்லது தாயின் பெயர்.
- உங்கள் தற்போதைய முழு முகவரி.
- நீங்கள் தனியாக வாழும் ஒரு தனிநபர், மற்றும் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதை உறுதிப்படுத்தும் பிரகடனம்.
- உங்கள் பெயர் வேறு எந்த குடும்ப ரேஷன் கார்டிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் சான்று.
- நீங்கள் வழங்கும் தகவல்கள் தவறாக இருந்தால், அதற்கு நீங்களே பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்ளும் அறிக்கை.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறை
தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது நேரடியாக அருகிலுள்ள தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், உங்கள் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது எளிதாகும்.
யாரெல்லாம் தனிநபர் ரேஷன் கார்டு பெறலாம்?
திருமணமாகாமல் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக வசிப்பவர்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிப்பவர்கள் உள்ளிட்டோர் தனிநபர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
ஒருவேளை எல்லா தகுதிகளும் முறையாக இருந்து நீங்கள் தனிநபர் ரேஷன் கார்டு பெற்றுவிட்டால், நீங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கும் மாதம் ரூ.1000 தமிழ்நாடு அரசு கொடுக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ