வேளாண் பட்ஜெட் 2026: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு விவரம்

Tamil Nadu Interim Agriculture Budget 2026:  2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.   

Written by - Umabarkavi K | Last Updated : Feb 17, 2026, 02:31 PM IST
வேளாண் பட்ஜெட் 2026: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு விவரம்

Tamil Nadu Interim Agriculture Budget 2026: தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், தமிழக அரசு இன்று (பிப்ரவரி 17) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முதலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு போன்றவற்றை அவர் அறிவித்துள்ளார். எனவே, வேளாண் பட்ஜெட்டின் டாப் அறிவிப்புகளை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள்

1. முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” 2024-25 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 178 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்பட்டு இதுவரை சுமார் 21 இலட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். 

2. கடந்த ஐந்து ஆண்டுகளில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 184 இலட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. காப்பீட்டுக் கட்டண மானியமாக 6,073 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

3. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் தனித்துவமான விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 41 விளைபொருட்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இதில் 9 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

4. நெல் சாகுபடி பரப்பையும், உணவு தானிய உற்பத்தியையும் அதிகரிக்க, கடந்த ஐந்து ஆண்டுகளாக காவேரி டெல்டா பகுதிகளில் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக குறித்த காலங்களில் திறந்துவிடப்பட்டது. அதுடன் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் ரூ.482 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு, 19.51 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

5. 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் குறுவை பருவத்தில் 12.48 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 இலட்சம் ஏக்கர் கூடுதல் சாகுபடி பரப்பாகும்.

6. கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்தம் 77,499 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இது தவிர 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்களும் நிறுவப்பட்டன. இதற்கென மானியமாக மொத்தம் 783 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

7. கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை சுமார் 2 இலட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தமுள்ள 23.86 இலட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதற்கென இதுவரை ரூ.33,904 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.

8. தமிழ்நாட்டில் கூடுதலாக 3.48 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளது.

9. தக்காளி, வெண்டை, கத்தரி, முருங்கை போன்ற காய்கறிகளின் பரப்பு 1 இலட்சம் எக்டரில் விரிவாக்கம், 1,979 எக்டர் நிரந்தர பந்தல் ஆகியவை மேற்கொள்ள 1.68 இலட்சம் விவசாயிகள் ரூ.259 கோடி மானியம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

10. மா, பலா, வாழை,கொய்யா, பப்பாளி போன்ற பழங்களின் சாகுபடி பரப்பு 36,555 எக்டரில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கென, ரூ.72.47 கோடி மானியம் வழங்கப்பட்டு 48,580 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

11. கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை 186 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

12. 2020-21 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு 123 சதவீதமும், சாதாரண ரக நெல்லுக்கு 162 சதவீதமும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

13. கடந்த ஐந்து ஆண்டுகளில் 184 இலட்சம் எக்டர் பரப்பு, சுமார் 80 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது.  வேளாண் கல்வியின் தரம் பெருமளவு உயர்த்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..

மேலும் படிக்க: தமிழக பட்ஜெட் 2026: பெண்களுக்கான முத்தான அறிவிப்புகள்.. பட்டியலிட்ட தங்கம் தென்னரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News