தமிழக பட்ஜெட் 2026: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் அக்கரை காட்டிய திமுக அரசு

TN Interim Budget 2026 Adi Dravidar: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில் ஆதிதிராவிடர் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் கோவில் திருப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கடன் ₹10.62 லட்சம் கோடியாக இருந்தாலும், மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றி தொடர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2026, 01:50 PM IST
  • சென்னையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய எம்.சி.ராஜா கல்லூரி விடுதி கட்டப்பட்டுள்ளது.
  • அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டிற்கு ரூ.1,000 கோடி.
  • 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.214 கோடி
தமிழக பட்ஜெட் 2026: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் அக்கரை காட்டிய திமுக அரசு

Finance Minister Thangam Thennarasu: தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று (பிப்ரவரி 17, 2026) தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில் (Interim Budget) "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்" பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?, அதேநேரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

இடைக்கால பட்ஜெட்டின் முக்கியத்துவம் என்ன?

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில், குறிப்பாக தேர்தல் ஆண்டை முன்னிட்டு, அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்வதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் ஆன்மீகத் தலங்களின் மேம்பாடு ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை என்ன?

திமுக அரசு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரசின் சொந்த வரி வருமானம் சுமார் 2.29 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதில் 5,281 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் விடுதிகள்: சென்னையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய எம்.சி. ராஜா கல்லூரி விடுதி கட்டப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்: வெளிநாடுகளில் உயர்கல்வி பயில இதுவரை 385 மாணவர்களுக்கு ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார மேம்பாடு: சிஎம் அரைவ்ஸ் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்கள் நலன்: 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ரூ.214 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்

பிற்படுத்தப்பட்டோர் நலன்: கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 29.67 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 19.48 லட்சம் மாணவர்களுக்கு ரூ.919 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினர் நலன்: உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 3,000-லிருந்து ரூ. 5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.39 கோடியில் 'ஹஜ் இல்லம்' கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்: இந்து சமய அறநிலையம் மற்றும் சுற்றுலா

திருக்கோவில் திருப்பணிகள்: கடந்த 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8,100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.8,363 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறை: சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கண்ணாடி இழை பாலம்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையேயான கண்ணாடி இழை பாலத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை 43% அதிகரித்துள்ளது.

துறைவாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

சுகாதாரத் துறை: மருத்துவத் துறைக்காக ரூ.22,090 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை: மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி: மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறை: பள்ளி கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - Tamil Nadu Budget 2026 LIVE : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முதல் முதியோர் ஓய்வூதியம் வரை - தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் புதிய அறிவிப்புகள்

மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்படாது! அமைச்சர் அதிரடி அறிவிப்பு

மேலும் படிக்க - தமிழக பட்ஜெட் 2026: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News