TN Latest News Updates: நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Tamil Nadu Assembly Latest News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நீண்ட விடுமுறைக்கு பின் இன்று சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது கூடலூர் தொகுதியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
TN Latest News Updates: குறைவான நிதியே கிடைக்கிறது
அதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பது போல அல்லாமல் தொழில் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுட்பத்துறை வசம் இருக்கிறது" என வேதனை தெரிவித்தார்.
TN Latest News Updates: பிடிஆர் பழனிவேலுக்கு அட்வைஸ் சொன்ன அப்பாவு
மேலும், "டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில்துறை வசம் இருக்கும் அசாதாரண நிலையே தொடர்கிறது. மேலும் நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் அது கிடைக்கும்" எனவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனையுடன் பதில் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத்தலைவர் அப்பாவு, துறைசார்ந்த பிரச்னைகளை முதலமைச்சரிடம் பேசி தீர்வு காண வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் பாசிட்டிவான பதிலை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
TN Latest News Updates: ஸ்டாலின் vs இபிஎஸ்
கடந்த மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதில் மார்ச் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தனர். மார்ச் 21ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
கடந்த மார்ச் 14ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. நீட் ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் இல்லை என்றால் கூட்டணி கிடையாது என்று நீங்கள் சொல்ல தயாரா என எடப்பாடி பழனிசாமியை நோக்கி, ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய எதிர்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தீர்ப்புள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் பேசமுடியும் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ