தேர்வு, நேர்காணல் இல்லை.. மாதம் ரூ.67,000 சம்பளத்தில் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Jobs: தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வும்,  நேர்காணல் எதுவும் இல்லை.

Written by - Umabarkavi K | Last Updated : Dec 15, 2025, 03:49 PM IST
  • மாதம் ரூ.67,000 சம்பளம்
  • தமிழக அரசு இந்த வேலை பற்றி தெரியுமா?
  • உடனே அப்ளை பண்ணுங்க
தேர்வு, நேர்காணல் இல்லை.. மாதம் ரூ.67,000 சம்பளத்தில் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Jobs: தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.   அந்த வகையில், தற்போது கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

பணி குறித்த விவரம்

மிழக அரசின் பொது சுகாதாரத்துறையில்  கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இதில் பொதுப் பிரிவில் 9 இடங்களும், பிசி பிரிவில் 10 இடங்களும், பிசி (எம்) பிரிவில் ஒரு இடங்களும், எம்பிசி பிரிவில் 5 இடங்களும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 13 இடங்களும் என மொத்தம் 41 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  

கள உதவியாளர் பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயது   நிரம்பி இருக்க வேண்டும். இதில் பொது பிரிவினருக்கு 32 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் பட்டியலின, பழங்குடி, பிசி, பிசிஎம், டிஎன்சி ஆகிய பிரிவினருக்கு உச்ச வயது எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில் நுட்பத்தில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வெளியில் சென்று பணியாற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும்,  கண் திறன், உடல் நலன் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு, நேர்காணல் இல்லை

தமிழக அரசின் கள உதவியாளர் பணிக்கு நேர்காணல், தேர்வு ஆகியவை எதுவும் கிடையாது. விண்ணப்பதாரரின் கல்வித்தகுதியின் அடிப்படையில் தான், பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 10,12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத சம்பளம்

கள உதவியாளர் பணிக்கு  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.67,100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்ப தகுதியுள்ள,  ஆர்வலமுள்ளவர்கள்  mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் ரூ.300 செலுத்த வேண்டும்.  டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் - வானிலை மையம் அறிவிப்பு!

 

மேலும் படிக்க:ரேஷன் கார்டு முக்கிய தகவல்! 60,000 டன் பருப்பு கொள்முதல்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News