பெண்களுக்கு அரசு கொடுத்த குஷியான அப்டேட்! 5 ஏக்கர் நிலம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Nannilam Scheme : பெண்கள் 5 ஏக்கர் வரையில் நிலம் வாங்க வழிவகை செய்யும் நன்னிலம் திட்டம் குறித்த குஷியான அப்டேட்டை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது. முழு விவரம் இங்கே....  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Dec 8, 2025, 07:19 AM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்
  • நன்னிலம் திட்டத்தில் குட் நியூஸ்
  • யாரெல்லாம் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்?
பெண்களுக்கு அரசு கொடுத்த குஷியான அப்டேட்! 5 ஏக்கர் நிலம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Nannilam Scheme : பெண்கள் சொந்த நிலம் வாங்க வழிவகை செய்யும் நன்னிலம் திட்டம் குறித்த குஷியான அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏழை எளிய மற்றும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தும் பல திட்டங்களில் ஒன்று நன்னிலம் திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாய கூலிகளாக இருக்கும் பெண்கள் நில உடமைதாரர்களாக மாற்றுகிறது தமிழ்நாடு அரசு. 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க அரசு கடனுதவி வழங்குகிறது. இத்திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே பார்க்கலாம்..

Add Zee News as a Preferred Source

நன்னிலம் திட்டம் - தமிழ்நாடு அரசின் அப்டேட்

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் நன்னிலம் நில உரிமைத் திட்டத்தில் 408 பழங்குடியின பெண்கள் நிலவுடமையாளர்களாக உயர்ந்துள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் புதிதாக பலரும் விண்ணப்பிக்க விரும்பலாம். ஆனால், இத்திட்டத்துக்கென விதிமுறைகள் இருக்கின்றன. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம்? நன்னிலம் திட்டத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நன்னிலம் திட்டம் என்றால் என்ன?
 
தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றும் வகையில் "நன்னிலம் திட்டம்" (Nannilam scheme) என்ற ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க 50% மானியம் பெறலாம். இத்திட்டம் தாட்கோ (TAHDCO) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நிலமற்ற பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் பெண் இல்லாத பட்சத்தில், கணவர் அல்லது மகன் விண்ணப்பிக்கலாம்.

நன்னிலம் திட்டம் விதிமுறைகள்

1. விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம்: விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

2. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.

3. திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இது நிலம் வாங்குவதற்கு மட்டுமின்றி, நிலத்தை மேம்படுத்துதல், ஆழ்குழாய் கிணறு, பம்ப் செட் மற்றும் சொட்டுநீர் பாசனம் போன்ற அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.

4. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

5. வாங்கப்படும் நிலத்தை 20 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது.

6. விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு பெற, ரூ. 75,000 வைப்புத் தொகையை தாட்கோ நேரடியாக மின்சார வாரியத்தில் செலுத்தி விரைந்து மின் இணைப்பு கிடைக்க வழிவகை செய்கிறது.

எங்கு விண்ணப்பிப்பது?

தகுதியுள்ளவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாட்கோ அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், https://tahdco.com/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள இசேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கவும். 

மேலும் படிக்க | நன்னிலம் திட்டம் : பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்! இசேவை மையம் மூலம் விண்ணபிக்கலாம்

மேலும் படிக்க | 5 ஏக்கர் நிலம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்! மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News