)
Tamilnadu Government Pension Scheme For Women : நமது சமூகத்தில் பெண்கள் தனித்து வாழ்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அப்படி "இருக்கின்ற நிலையில் கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த கைம்பெண்கள் சுயமாக வேலைக்கு செல்ல வேண்டுமானாலும் அல்லது தொழில் தொடங்க வேண்டுமானாலும் முதலீடு தேவை மேலும் சரியான ஆதரவு தேவை. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் ஒரு ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் ஆதரவற்ற கணவனை இழந்த பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம். இதன் மூலம் ஆதரவற்ற கணவனை இழந்த பெண்கள் தனது குறைந்தபட்ச பொருளாதாரத்தையாவது சமாளிக்க முடியும். இப்போது இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்
ஆதரவற்ற/ கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் :
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக தமிழ்நாடு அரசால் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்திற்கு தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியம் 10 அலுவல்சார் மற்றும் 14 அலுவல்சாரா உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் முதல் கூட்டம் 16. 05. 2023 அன்று தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த நலவாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம், ஆதரவற்ற பெண்களுக்கு 1,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர் இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக பயோமெட்ரிக் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும் விண்ணப்பப் படிவத்தில், அனைத்து கட்டாய புலங்களையும் நிரப்பி இருக்க வேண்டும், மேலும் அனைத்து கட்டாய ஆவணங்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து ரசீது அல்லது ஒப்புதலைக் கோரி ரசீதில் சமர்ப்பிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் போன்ற அத்தியாவசிய விவரங்கள் மற்றும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் உறுதிசெய்ய வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சரியான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கணவனை இழந்த கைம்பெண்களுக்கு மாத ஓய்வூதியம் மட்டும் அல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் அங்கன்வாடி மையங்களில் இருந்து புடவை, அரிசி உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. பெண்களுக்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களில் இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டமாக அனைவரின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
இத்திட்டமானது பெண்களுக்கு ஓரளவுக்கு தங்களது பொருளாதாரத்தை சமானிக்கும் வகையில் இருக்கும் என்றாலும் ஒவ்வொரு மாதமும் யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை என்ற ஒரு நிம்மதி பெருமூச்சை ஆதரவற்ற பெண்களுக்கு அளித்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ஆதரவற்ற பெண்களும் கணவனை இழந்த பெண்களும் தங்களுடைய நலிவான பொருளாதாரத்தை எண்ணி சோர்வடைந்து இருக்காமல் இது போன்ற திட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் சமூக நல விரும்பிகளின் எண்ணமாக உள்ளது. எனவே இத்திட்டம் குறித்து தெரியாத நலிவடைந்த ஆதரவற்ற கணவனை இழந்த பெண்களுக்கு தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
தகுதி விவரங்கள்
ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும். வயது-30 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பூர்வமாகவிவாகரத்து பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும். அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவு சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளர்கள் சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும். ஆனால், வழங்கப்பட்டுள்ள இலவச வீடுகளின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
தேவையான ஆவணங்கள்
* பயனாளியின் புகைப்படம்,
*ஆதார் கார்டு,
* குடும்ப அட்டை அல்லது ஏதாவது ஒரு முகவரி சான்று,
* சுயவிளக்க படிவம்,
* கணவரின் இறப்பு சான்று.
* விதவைச் சான்று,
* வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,
* பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று,
* வங்கி கணக்குப் புத்தகம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ