போலீஸ் தேர்வுக்கு படிக்கிறீர்களா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Police Exam: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 20, 2025, 04:47 PM IST
  • தமிழ்நாடு போலீஸ் தேர்வு அறிவிப்பு
  • கன்னியாகுமரியில் இலவச பயிற்சி
  • தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
போலீஸ் தேர்வுக்கு படிக்கிறீர்களா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Police Exam: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கு எங்கு படிப்பது, எப்படி படிப்பது என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான வழிகாட்டலை கொடுக்கும் அறிவிப்பு தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகியுள்ளது. பணம் கட்டி படிக்க முடியாதவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்படும் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அத்துடன் தங்களின் காவலர் கனவையும் நனவாக்கிக் கொள்ளலாம். இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சாரிஆய்வாளர்கள் (S) தாலுகா பதவிகளுக்கு 933 பணிக்காலியிடங்களும், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 காலிப்பணியிடங்களுமென மொத்தம் 1200 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏதாவது இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிபதற்கான கடைசி நாள் மே 03 ஆம் தேதி. 

இத்தேர்வுக்கு விண்ணப்பிபதற்கான இணையதள முகவரி https://www.inusrb.tn.gov.in/ ஆகும். காவல் சார்ஆய்வாளர்கள் (SI) தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து  23.04.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் காவல் சார்ஆய்வாளர் (S) தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டும்.

அங்கு,  தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Matorial) இலவசமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித்தேர்வுகள் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான histaminaducareers.tn.avn என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

மேலும்  படிக்க | பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன் கோரிக்கை!

மேலும் படிக்க | ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அண்ணாமலைக்கு இருக்கின்றது - நயினார் நாகேந்திரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News