Tamil nadu Government : தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு சேவைகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வராமலேயே ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவில் கலந்து கொள்ளலாம். Star 30 திட்டம் ஸ்பிரிண்ட் 1 என்ற இத்திட்டத்தை முதலமைச்சர் சென்னையில் இருந்து தொடங்கினார். இப்போது திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை
இந்த சுற்றறிக்கையின்படி பதிவுத் துறையில் ஆவணப் பதிவிற்காக Star 30 திட்டம் ஸ்பிரிண்ட் 1 உள்ளடங்கிய காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகைஇல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், புலனவழி(WhatsApp)தகவல் தொடர்பு, கைபேசிசெயலி, மையக்கணினிவழி சான்றிட்ட நகல் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட வில்லங்கச்சான்று வழங்குதல், விரைவுக் குறியீட்டுடன் கூடிய புதிய குறு பணப் பரிவர்த்தனை (QR Code Based Payment) ஆகிய சேவைகளுக்கு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு புதிய அப்டேட்
இந்த திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் 22.01.2026 அன்று துவக்கி வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி காகிதமில்லா ஆவணப்பதிவில் (Paperless Registration) ஆவணத்தை பொதுமக்கள் எழுதி பதிவுத்துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, இணைய வழியில் பணம் செலுத்தி ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகளுடன் நேரில் ஆஜராகி, சார்பதிவாளர் ஆவணத்தில் கண்ட நபர்களை அவர்கள் அளிக்கும் ஆதார் அட்டையினை இணையவழி மூலம் சரிபார்த்து கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணம்பதிவு செய்யப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியிலேயே பொதுமக்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வகை காகிதமில்லா ஆவணப்பதிவில் அனைத்துவகை ஆவணங்களும் பதிவு செய்யப்படும்.
நேரடி வருகை தேவையில்லை
மேற்படி நேரடிவருகை இல்லா ஆவணப்பதிவில் (Presenceless Registration) ஆவணத்தை பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தராமலேயே மேற்படி மென்பொருளை பயன்படுத்தி ஆவணப்பதிவிற்காக கீழ்க்கண்ட நேரடி வருகையில்லா ஆவணப்பதிவுக்கு கட்டுமான நிறுவனத்திடமிருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் போதும், புதிதாக உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலிருந்து மனைகளை மட்டும் வாங்கும் போதும் முதல் கிரைய ஆவணத்தைப் பொருத்து (Filrst Sale) பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட சொத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்தோ பத்திரத்தை இணையதள வழியாக பதிவுக்கு தாக்கல் செய்யலாம்.
என்னென்ன சேவைகளுக்கு ஆன்லைன் வசதி?
மேலும், விற்பனை உடன்படிக்கை (Sale Agreement), குத்தகை ஆவணம் (Lease Deed/ Agreement of Lease), உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம் (Deposit of Title Deeds), இரசீது ஆவணம் (Deed of Receipt), சுவாதீனத்துடன் கூடிய அடைமான ஆவணம் (Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா அடைமான ஆவணம் (Mortgage wilthout Possession Deed), சுவாதீனத்துடன் கூடிய மேல்ஈடு ஆவணம் (Further Charge Mortgage wilth Possession Deed), சுவாதீனமில்லா மேல்ஈடு ஆவணம் (Further Charge Mortgage withoutPossession Deed), அறக்கட்டளை ஆவணம் (Deed of Trust) ஆகிய ஆவணங்களை இணைய வழியே பதிவுக்கு தாக்கல் செய்யும்போது சொத்தினை எழுதிக்கொடுப்பவர் மற்றும் எழுதிவாங்குபவர்களின் அடையாளமானது விரல்ரேகை ஆதார் ஆணையத்துடன் சரிபார்க்கப்பட்டு இணைய வழிகட்டணம் செலுத்தியவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சார்பதிவாளரின் மின்னணு கையொப்பம் இடப்பட்டு மின்னணு ஆவணமாக இணைய வழியில் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான அப்டேட்
எனவே மேற்கண்ட காகிதமில்லா ஆவணப்பதிவு மற்றும் நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு ஆகியவற்றை பதிவுத்துறையின் இணைய தளமான www.tnreginet.net என்ற இணையதளத்தில் ஆவண உருவாக்கம் குறித்தும், தங்களுக்கான சேவைகளை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே தாங்களே ஆவணத்தினை உருவாக்கி சேவையை எளிதாக பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பதிவுத்துறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள STAR 3.0 திட்டதின் கீழ் ஆவணப்பதிவு மேற்கொள்வது தொடர்பாக பதிவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் தாலுகா வாரியாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு விரிவான தகவல்களை அறிந்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









