Rajya Sabha MP Christopher Tilak: நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணக்கை 345 ஆகும். இதில் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமனம் செய்வார். எஞ்சிய 233 உறுப்பினர்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் 6 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
மாநிலங்களவை தேர்தல்
நாடு முழுவதும் மாநிலங்களவையில் இருந்து 37 பேர் ஓய்வு பெறுகின்றனர். 37 உறுப்பினர்களை தேர்வு செய்ய மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகீறது. தமிழகத்தில் இருந்து 6 எம்.பிக்களை தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், தம்பிதுரை, திருச்சி சிவா, சோமு, ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ் டைன்டன் ரவீந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக வேட்பாளர் சதிஷ், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, பாமக வேட்பாளர் அன்புமணி ஆகியோர் நேற்று (மார்ச் 5) வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களின் சொத்து மதிப்பு தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வகையில், ரூ.13,000 பணம், சொத்து எதுவும் இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் ஒரு எம்.பியை அனுப்பி வைக்கிறது. அது வேறு யாரும் இல்லை, கிறிஸ்டோபர் திலக் தான். இவர் நேற்று தாக்கல் வேட்பு மனுவின் விவரத்தின்படி, இவரது கையில் வெறும் ரூ.13,000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
கையில் ரூ.13,000 பணம்.. சொத்து கிடையாது
கிறிஸ்டோபர் திலக் தமிழகத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணியாற்றி ஆற்றியுள்ளார். இவர் தற்போது மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். இவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரிடம் சொத்து எதுவும் கிடையாது. இவரிடம் தற்போது ரூ.13,000 மட்டுமே செலவிற்கு வைத்துள்ளராம். மேலும், ஒரு சவரன் நகை மட்டும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்டோபர் திலக் குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "கிறிஸ்டோபர் திலுக்குக்கு சொத்து கிடையாது. எதுவுமே இல்லாத அடிமட்ட தொண்டனை நாங்கள் எம்.பியாக தேர்வு செய்திருக்கிறோம். அவர் வெறும் ரூ.13,000 பணம், ஒரு சவரன் மட்டுமே வைத்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
53 வயதான கிறிஸ்டோபர் திலக் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தலித் கிறிஸ்தவர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். 20 ஆண்டுகளாக முன்பு காங்கிரஸில் இணைந்த இவர், கட்சியின் இளைஞர் பிரிவு, பட்டிலியன, பழங்குடி பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழகத்தை தாண்டி பல்வேறு வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு தேர்தல் பணியாற்றியுள்ளார்.
மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மேலிட பொறுப்பாளராக உள்ளார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத தலைவராக கிறிஸ்டோபர் திலக் இருக்கிறார். தன்னுடைய முழு உழைப்பில் தான், அவர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளார். தமிழ்நாடு மற்றும் டெல்லி காங்கிரஸ் கட்சிக்கு தீவிர விசுவாசி என கருதப்படுகீறார்.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் கிறிஸ்டோபர் திலக். மேலும், கார்கே, கே.சி.வேணுகோபால் வரை அனைத்து தலைவர்களுக்கும் பிரிச்சயமானவர். ஆந்திரா மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்காக அயராது உழைக்கும் திலக், காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் பிடித்தவராகவும் இருக்கிறார். மிகவும் எளிமையான மனிதராகவும் அறியப்படுகிறார். மாநிலங்களவை எம்.பி சீட்டுக்கு சீனியர்களை தேர்வு செய்யாமல், புதுமுகமான கிறிஸ்டோபர் திலக்கை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது.
மேலும் படிக்க: மாதம் 20 ஆயிரம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









