ரேஷன் கார்டு : போன் நம்பர் மாத்தனுமா? புதிய நகல் குடும்ப அட்டை வேண்டுமா? முக்கிய அப்டேட்

Ration card : ரேஷன் கார்டு தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் வரும் நவம்பர் 8 ஆம் தேதி நடக்கும் குறைதீர்முகாமில் கலந்து கொண்டு தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 6, 2025, 03:46 PM IST
  • ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்
  • நகல் குடும்ப அட்டை வேண்டுமா?
  • மொபைல் எண், முகவரி மாற்ற வேண்டுமா?
ரேஷன் கார்டு : போன் நம்பர் மாத்தனுமா? புதிய நகல் குடும்ப அட்டை வேண்டுமா? முக்கிய அப்டேட்

Ration card : தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு இருக்கும் குறைகளை, மாதந்தோறும் நடக்கும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாமில் நேரடியாக கலந்து கொண்டு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கூட்டங்கள் நடக்கும். இம்மாதம் சென்னை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நவம்பர் 8 ஆம் தேதி நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் வரை அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

சென்னை 

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 08.11.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 08.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருப்பத்தூர்

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, நவம்பர் 2025-ம் மாதத்திற்கு வட்ட அளவிலான குறைதீர்வு முகாம் 08.11.2025 அன்று நடத்துமாறு அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரால் மேற்காணும் தேதியில் கீழ்கண்ட கிராமங்களில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் பின்வரும் விவரப்படி குறிப்பிட்ட கிராமங்களில் 08.112025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

திருப்பத்தூர் - கெஜல்நாயக்கன்பட்டி நியாய விலைக் கடை
நாட்டறம்பள்ளி - பெரியகப்பம்பட்டு நியாய விலைக் கடை
வாணியம்பாடி - ஆவரங்குப்பம் நியாய விலைக் கடை
ஆம்பூர் - உ.மாராபாத் நியாய விலைக் கடை

மேற்கண்ட குறைதீர்வு முகாம் நடைபெறும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம், புதிய / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், நியாயவிலை கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்ற கோரிக்கைகளை நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்து குறைகளை தீர்வு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருக்கிறீர்களா? முக்கிய தகவல்

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : கைவிரல் ரேகை பதிவு - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News