ரேஷன் கார்டு : இன்றே கடைசி! 3 முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு அரசு

Ration card : ரேஷன் கார்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் மூன்று முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Dec 3, 2025, 06:26 AM IST
  • ரேஷன் கார்டு முக்கிய உத்தரவு
  • நகல் குடும்ப அட்டை விநியோகம்
  • தாயுமானவர் திட்டம் முக்கிய அப்டேட்
ரேஷன் கார்டு : இன்றே கடைசி! 3 முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு அரசு

Ration card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வந்து வழங்குவது இன்று கடைசி நாள், நகல் குடும்ப அட்டை விநியோகம்,  ரேஷன் கடை செயல்பாடுகளை இணையவழியில் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு ஆகிய மூன்று தகவல்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

ரேஷன் பொருள் விநியோகம் இன்று கடைசி

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகம் செய்துகிறது. டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என அரசு அறிவித்து, அதன்படி பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இப்பணி இன்றுடன் முடிவடைகிறது. மீண்டும் அடுத்த மாதம் மட்டுமே ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வந்து விநியோகம் செய்யப்படும். ஒருவேளை ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு தேடி வந்தபோதும் பெறாதவர்கள், குடும்ப உறுப்பினரை ரேஷன் கடைக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

நகல் குடும்ப அட்டை

ஒரிஜினல் குடும்ப அட்டை தொலைந்துவிட்டால், தமிழ்நாட்டில் ஆன்லைனிலேயே நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக அப்டேட்டை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, 7, 38, 778 நகல் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நகல் குடும்ப அட்டை வேண்டும் என்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கார்டு ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கே அஞ்சல்துறை மூலம் அனுப்பி வைக்கப்படும். நேரில் சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை.

எப்படி ஈஸியாக விண்ணப்பிக்கலாம் என்றால்,  தமிழ்நாடு அரசின் https://www.tnpds.gov.in/ வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அங்கே முகப்பு பக்கத்தில் வலது பக்க ஓரத்தில் ’நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க’ என்ற ஆப்சன் இருக்கும்.  அதனை நீங்கள் கிளிக் செய்து, கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்து ஈஸியாக நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது உங்களின் ஒரிஜினல் குடும்ப அட்டை தொலைந்து இருந்தால், அவர்கள் மட்டுமே இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ரேஷன் கடை - அதிகாரிகளுக்கு உத்தரவு

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளை இணையவழியில் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் தற்போது மின்னணுமயமாக்கப்பட்டு (End to End Computerization) வருகிறது. இதன் மூலம் பொது விநியோகத்திட்ட நடவடிக்கைகள் MIS இணையதளத்தின் வழியாக கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில், தற்போது மாதாந்திர இறுதி நாட்களில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களை விற்பனை முனைய கருவியினை
ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துக்கொண்டு கலந்து கொள்ளுமாறு கூட்டுறவுத்துறை அலுவலர்கள் வற்புறுத்துவதாகவும் மற்றும் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பான தரவுகளை Manual ஆக எழுதி சான்றொப்பமிட்டு வழங்குமாறு நியாயவிலைக்கடை விற்பனையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் பொது விநியோகத் திட்டச் செயல்பாடுகளை MIS, Portal, IMPDS உள்ளிட்ட இணையதளங்களின் வழியாக கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், நியாயவிலைக்கடை விற்பனையாளர்களை விற்பனை முனைய கருவியினை கூட்டுறவுத்துறை அலுவலகங்களுக்கு ஆய்விற்காக எடுத்துக் கொண்டு வரக் கட்டாயப்படுத்தும் வழக்கத்தைத் தவிர்த்திடவும் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பான தரவுகளை Manual ஆக கோரும் பழைய நடைமுறைகளைக் கைவிடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது என சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Ration Card : ரேஷன் கார்டு முக்கிய தகவல் - ரேஷன் வீடு தேடி வர விண்ணப்பிக்கலாம்

மேலும் படிக்க | ரேஷன் கார்டு உள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன், மானியம் உண்டு - கல்வி தேவையில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News