Tamil Nadu Latest Weather Update: கடந்த மாதம் பாதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த சூழலில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து வானம் வறண்டு காணப்பட்டு வருகிறது. நேற்று (நவம்பர் 12) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், இன்று (நவம்பர் 13) முதல் நாளை மறுநாள் 15-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டிருந்தது.
TN Weather Alert: நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில்
மேலும், நவம்பர் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டிருந்தது. 17-11-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Weather Alert: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் சில கடலோர மாவட்டங்கள் உட்பட, அவ்வப்போது மற்றும் பின்னர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர், தமிழ்நாட்டில் அடுத்ததடுத்த 3 நிகழ்வுகளால் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறி இருந்தார். அதன்படி, வருகிற 15ஆம் தேதி இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும். 18 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!
மேலும் படிக்க: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. அலர்ட் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









