அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் - சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வெதர்மேன் கூறியுள்ளார்.  மேலும், சென்னையிலும்  மிதான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.  

Written by - Umabarkavi K | Last Updated : Nov 11, 2025, 12:10 PM IST
  • வெளுத்து வாங்கப்போகும் கனமழை
  • தென்மாவட்டங்ளுக்கு எச்சரிக்கை
  • டெல்டா வெதர்மேன் பகிர்ந்த தகவல்
அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் - சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!

Delta Weatherman Hemachander Latest News: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே அக்டோபர் மாதம் முடியும் வரை தமிழகம் முழுவதும்  மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. எப்போதும் நவம்பர் மாதத்தில் இல்லாத வானிலை நிலவி வருகிறது. எனவே,  தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை இந்தாண்டு (2025) கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

வெதர்மேன் கொடுத்த அலர்ட்

இந்த நிலையில், மழை எப்போது, எங்கெல்லாம் பெய்யும் என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், "2025 நவம்பர் 11ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யும். மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம்,  தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

2025 நவம்பர் 12ஆம் தேதி காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கு கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இன்னும் ஒரு சில மழை பெய்யும். தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில் பரவலான மழைப்பொழிவுக்கு குறைந்தது இன்னும் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டியிருக்கும். தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் அனைத்து வகையான விவசாய நடவடிக்கைகளையும் ஒத்திவைப்பது நல்லது.

வானிலை மையம் சொல்வது என்ன?

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி,  இன்று நவம்பர் 11ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நவம்பர் 12ஆம் தேதி  திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேலும், நவம்பர் 13ஆம் தேதி கோவை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை, இன்று (நவம்பர் 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.   இதற்கிடையில்,  நவம்பர் மாத இறுதியில் புயல் உருவாகலாம் என வெதர்மேன் கணித்திருந்தார். ஆனால், இந்த புயல் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கும் என்பது குறித்த எந்த தகவலுக்கு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:  வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!

மேலும் படிக்க: +2 படித்தாலே போதும்.. உள்ளூரிலேயே அரசு வேலை.. தேர்வு கூட இல்ல!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News