Tamil Nadu Weather Today Update: தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே பனிமூட்டம் நிலவி வருகிறது. பெரிய அளவில் மழை பொழிவு என்பது இல்லை. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. அதன்பிறகு, தமிழகம் முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது. இந்தநிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
டெல்டா வெதர்மேன் கூறுகையில், "பிப்ரவரி 18,19ஆம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆரம்பத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளை நோக்கி நகர்ந்து பின்னர் ஆழ்கடல் நீரில் மீண்டும் வளைந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வானிலையால் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. பகல்நேர வெப்பம் மற்றும் பனிமூட்டமான இரவுகளுடன் கூடிய வறண்ட வானிலை இருக்கும்.
பிப்ரவரி 20ஆம் தேதி மழை பெய்ய தொடங்கும். பிப்ரவரி 21 முதல் 23ஆம் தேதி வரை காவிரி டெல்டா பகுதி மற்றும் தெற்கு கடலோர தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்தக் காலம் அறுவடைக் காலத்துடன் ஒத்துப்போவதால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் லேசான மழை கூட அறுவடை செயல்முறையை சீர்குலைக்கும். கனமழை எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அறுவடை நடவடிக்கைகளை விவசாயிகள் ஒத்திவைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பிப்ரவரி 24 முதல் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை மீண்டும் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.
வானிலை மையம் சொல்வது என்ன?
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிதுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, பிப்ரவரி 20,21ஆம் தேதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் அதே நேரத்தில் , வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DWM WINTER WEATHER UPDATE| DATED: 15 TH FEBRUARY 2026|#Topic: FRESH LOW PRESSURE AREA LIKELY TO DEVELOP AROUND 18TH/19TH FEBRUARY.
WISH YOU ALL HAPPY & PROSPEROUS "MAHA SHIVARATHRI"
Weather Synopsis:
==> Under the influence of cyclonic circulation, a fresh low pressure area… pic.twitter.com/iFg2be9Z2g— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) February 15, 2026
மேலும் படிக்க: பயணிகளே அலர்ட்! சென்னை பேருந்துகளில் டிக்கெட் மெஷின் கோளாறு.. MTC முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









