)
Tamil Nadu Weather Update : இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு நகர்ந்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழ்நாட்டில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு
இதனிடையே, கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணை நீர் திறப்பு
காவிரியில் நீர்வரத்து அதகரிதுள்ளதால், முழுக்கொள்ளளவை எட்டியுள்ள மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகளவு திறதுவிடப்படுகிறது. நேற்று 45 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று 55 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ