Tamil Nadu Weatherman Pradeep John Latest Update: வடகிழக்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில், குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. இன்று (ஜனவரி 12) காலை முதலே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
வெதர்மேன் முக்கிய அலர்ட்
அவர் கூறுகையில், ”இரவு மற்றும் பகல் வெப்பநிலைக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் இன்று ஒரு சிறப்பு நாளாக இருந்தது. மலைப்பகுதிகளில் கூட இதே போக்குதான் இருந்தது.
இன்று பகலில் மிகவும் குளிராக இருக்கும். நாளை முதல் பகல் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்க்கு அருகில் இருக்கும். நேற்று ஜனவரி 11ஆம் தே பகல் வெப்பநிலை 24 டிகிரி வெப்பநிலை ஆக இருந்தது. இன்று காலை 21.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது. இரவுக்கும் பகலுக்கும் இடையே 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரையிலான வித்தியாசம் மிகவும் அரிதான ஒன்று. சென்னையில் பகலில் ஸ்வெட்டர் அணிந்தவர்களை நான் பார்த்ததில்லை.
சென்னையில் நேற்று பகலில் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியது. தொடர்ந்து கோவையில் 24.9, சேலத்தில் 25.8, திருச்சியில் 25.9, நாகையில் 25,.6, தஞ்சாவூரில் 25, குன்னூரில் 16, வேலூரில் 21.2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது.
பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னையில் இரவு நேர வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாக குறைவதைக் காண முடியும். எனவே டிசம்பர் மாதத்தைப் போலவே குளு குளு இரவு / அதிகாலை நாட்கள் மீண்டும் வரும். மலைவாசஸ்தலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா-கடலூரில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. அருகிலுள்ள மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும்.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி ஜனவரி 17ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் விடுமுறை! ஊருக்கு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. போக்குவரத்தில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









