)
Tamil Nadu Weatherman Pradeep John On Chennai Rains: தமிழகத்தல் 2025 அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. வங்கக் கடலிலும் இரண்டு காற்றழுத்தம் நிலவியது. இதில் அக்டோபர் கடைசி வாரத்தில் வங்கக் கடலில் மோந்த புயல் உருவானது. மோந்தா புயல் ஆந்திர கடற்கரையை கடந்தது. இதனால், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், தமிழகம் முழுவதும் மோந்தா புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறியது. ஆனால், அதன் பிறகு தமிழகத்தில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. வறண்ட வானிலையே நிலவியது. வெயிலும் ஒருசில இடங்களில் சுட்டெரித்தது. இப்படியான சூழலில், இன்று (நவம்பர் 4) காலை முதலே சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "வட தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும். இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வெப்பநிலையில் இன்று மற்றொரு சாதனை படைத்த நாளாகும். இன்று சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் என சில பகுதிகளில் மழை பெய்யும் என்பதால் வெப்பநிலை குறையும். சென்னைக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலான நவம்பர் மாதங்களில் மிகவும் வெப்பமான 3 நாட்கள் இந்த நவம்பர் மாதம் என்று நீங்கள் நம்புவீர்களா?
வெப்பநிலையைப் பொறுத்தவரை வரலாற்று சிறப்புமிக்கது நவம்பர் மாதம். ஈரோடு, மதுரையில் வழக்கத்தை விட நவம்பர் மாதத்தல் வெப்பநிலை அதிகமாக பதிவானது. தமிழ்நாட்டில் நவம்பர் மாத மழையை விட குறைவாக மழை பெய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று 03.11.2025 காலை 8.30 மணி முதல் 04.11.2025 காலை 8.30 மணி வரை 24 மணி நேரமும் வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது" என்றார். தொடர்ந்து, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ