குமரி டூ சென்னை... ஆட்டம் காட்டப்போகும் மழை.. தேதி குறித்த வெதர்மேன்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் பெரிதாக மழை பொழிவு இல்லாத நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.  தென் தமிழகத்தில் மழை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

Written by - Umabarkavi K | Last Updated : Nov 10, 2025, 09:47 AM IST
  • தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அலர்ட்
  • கொட்டப்போகும் கனமழை
  • சென்னை டூ குமரிக்கு அலர்ட்
குமரி டூ சென்னை... ஆட்டம் காட்டப்போகும் மழை.. தேதி குறித்த வெதர்மேன்!

Tamil Nadu Weatherman Pradeep John Latest News: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, தமிழகத்தில் நல்ல மழை பெய்து வந்தது. அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில், அந்த மாதத்தில் தமிழகம் முழுவதுமே மழை கொட்டியது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால், அக்டோபர் மாதத்தற்கு பிறகு, பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதற்கிடையில், கடந்த வாரம் ஒருநாள் மட்டும் சென்னை லேசான மழை பெய்தது. தற்போது தென் தமிழகத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. 

Add Zee News as a Preferred Source

வெதர்மேன் மழை எச்சரிக்கை

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய  தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "தென் தமிழக மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து மஐழ பெய்தது.  இதன் தொடர்ச்சியாக இன்று மழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்யும். வட தமிழகத்தை பொறுத்தவரை, சலனம் மிகவும் வலுவற்ற நிலையில் உள்ளது. 

எனவே, இன்று/நாளை மாலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில்  கிழக்கு அலை மழை பெய்யும். நாளை முதல்  டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும்.  மேலும்,  புதுச்சேரியிலும் மழை பெய்யும். நவம்பர் 11,12ஆம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்ளில் மழை பெய்துவிட்டு, அப்படியே குறைய தொடங்கிவிடும். மீண்டும். நவம்பர் 18,19ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக் கூடும்" என தெரிவித்துள்ளார்.

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் (நவம்பர் 12) தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 13ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை  மையம் கூறியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை, இன்று (நவம்பர்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? தமிழ்நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்

மேலும் படிக்க: தமிழ் பிக்பாஸ் நடைபெறும் இடத்தில் போலீஸ் குவிப்பு! என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News