)
Tamil Nadu Weatherman: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2025 அக்டோபர் 16ஆம் தேதி துவங்கியது. பருவமழை தொடங்கிய பிறகு, முதல் புயல் தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 2025 அக்டோபர் 26ஆம் தேதி நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று முன்தினம் இரவில் மோந்தா புயலாக வலுப்பெற்றது. மேலும், அந்த புயல் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டது.
மோந்தா புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து? இன்று மாலை ஆந்திர கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து, மசூலிப்பட்டினம் - கலிங்கப்படினத்துக்கு இடையே இன்று இரவு கரையை கடக்கும என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மோந்தா புயல், கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா வடக்கு-வடமேற்கு நோக்கி மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து, இன்று, அக்டோபர் 28, 2025 அன்று காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக, ஆந்திரா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்திலும் இந்த புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த மூன்று தினங்களாக இடைவிடாமல் சென்னைனையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும், மழையின் தீவிரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை மழை குறித்து தனது எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும். தென் சென்னையில் மழை இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். பின்னர் மழை குறைந்து மெதுவாக நின்றுவிடும். வட சென்னையில் 60-70 மி.மீ., எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் கடலுக்கு மிக அருகில் உள்ள பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 30-50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பொதுவாக நான் எதிர்பார்த்தது போலவே, நான் கணித்ததுபோலவே நடந்துள்ளது. என்னை புகழ்ந்து பேசுவது எனது வழக்கம் அல்ல. ஆனால், இந்த முறை நான் என்னை பாராட்டி கொள்கிறேன். மழை பொழிவின் விவரம் எனது கணிப்புகள் பொருந்திப் போனது. இது ஒரு கடினமான புயலாக இருந்தபோதிலும், நான் அதை சரியாக கையாண்டேன். சென்னையில் சென்னையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு லேசான மழை அல்லது விட்டுவிட்டு மழை பெய்யலாம்" என குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம், மோந்தா புயல் காரணமாக, சென்னை இன்றுக்குள் மழையின் தாக்கம் குறையும் என வெதர்மேன் கணித்துள்ளார்.
மேலும் படிக்க: மோந்தா புயல்: இப்போது எங்கு உள்ளது.. எப்போது கரையை கடக்கும்?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ