மாதம் ரூ.1,000 தரும் அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் முக்கிய அப்டேட்!

Tamil Pudhalvan Scheme: தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு நினைவுப்படுத்தியுள்ளது.  

Written by - Umabarkavi K | Last Updated : Dec 5, 2025, 05:19 PM IST
  • மாணவர்களுக்கு குட் நியூஸ்
  • தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் முக்கிய அறிவிப்பு
  • யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மாதம் ரூ.1,000 தரும் அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் முக்கிய அப்டேட்!

Tamil Pudhalvan Scheme Latest News: பலதரப்பட்ட மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மூத்த குடிமக்களுக்காக என முக்கிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், அவர்களின் கல்வி செலவுகளுக்காகவும்  தமிழக அரசு  கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் பொளாதார ரீதியாக வலுவாக இருப்பதற்காக உதவித் தொகை வழங்கி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

தமிழ்ப் புதல்வன் திட்டம்

அதாவது, பொருளாதாரம் பிரச்னை காரணமாக, மாணவர்கள் உயர்க்கல்வி நின்று விட கூடாது என்பதற்காக  தமிழக அரசு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் அரசு தகுதியுள்ள மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை  வழங்கி வருகிறது. இந்த திட்டம் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

அதாவது, தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.  தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வியைத் தொடரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்படும் நிலையில், அதில் யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 

யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்?

அதன்படி, அரசுப் பள்ளிகள்/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், 12ஆம் வகுப்பு முடித்து, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருபவர்கள், தனியார் பள்ளியில் RTE மூலம் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படித்து பின் அரசுப் பள்ளியில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையலாம்.

மேலும், இதர உதவித் தொகையை பெறுவது தகுதியை பாதிக்காது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள்  இளங்கலை படிப்பு முடியும் வரை ரூ.1,000 பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்ப உள்ள மாணவர்கள், கண்டிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கட்டாயம் ஆண் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும், மாணவர்களின் உயர்கல்விக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொள்ள இது பெரிதும் உதவும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் தகுதியுள்ள மாணவர்கள்  தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக UMIS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, ரேஷன் கார்டு, மின் கட்டண அட்டை, இருப்பிட சான்று, மொபைல் நம்பர் போன்ற விவரங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். ரூ.1,000 பெறாத மாணவர்கள், உடனே விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ. 15 லட்சம் பெற தொழில் செய்பவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசு

 

மேலும் படிக்க: அன்புகரங்கள் திட்டம் : மாதம் ரூ.2000 - பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News