கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி மிகவும் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் இருந்தனர். அதில் ஆதவ் அர்ஜுனா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியிருந்தார். "அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக் கொண்டு தேர்தலில் இன்று 20% வாக்குகளை வாங்கி இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரவில்லை. பாஜகவே அவரை கழட்டி விடும் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி ஆதவ் அர்ஜுனா மீது கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது X தளத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
மேலும் படிக்க | கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது தெரியுமா?
ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, "அனைவருக்கும் வணக்கம், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு" என்று தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வணக்கம்,
எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன்…
— Aadhav Arjuna (@AadhavArjuna) June 1, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









