)
கரூர் சம்பவம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 12 தீர்மானங்கள் பின்வருமாறு:
EXCLUSIVE: UHD Recent Clicks of our Thalapathy Vijay from the event. pic.twitter.com/wmONz2Rxgm
— Actor Vijay Team (@ActorVijayTeam) November 5, 2025
- கரூர் நிகழ்வில் உயிரிழந்தோருக்காக இரங்கல் தெரிவித்ததுடன், 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- SIR மசோதாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சரியாக நடைபெறாமல் விவசாயிகளை பாதிக்கும் அரசை விவசாய விரோத அரசாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தொழில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
- மக்கள் சந்திப்பில் தலைவர் விஜயும், பொதுமக்களும் முழுமையான பாதுகாப்புடன் இருக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
- கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் குற்றம்சாட்டி அவதூறு பரப்பும் ஆளும் கட்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அடிப்படை பொதுப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த நபர்களை கைது செய்து கருத்துரிமையை ஒடுக்குகிற அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- எதிர்கால கூட்டணி முடிவுகள் தொடர்பாக முழு அதிகாரமும் தலைவர் தளபதி விஜய்க்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
BREAKING: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
— Actor Vijay Team (@ActorVijayTeam) November 5, 2025
- கரூர் நிகழ்வில் உயிரிழந்தோருக்காக இரங்கல் தெரிவித்ததுடன், 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என…
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, "நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. எண்ணற்ற சோதனைகளை சந்தித்து வந்திருக்கிறோம். பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். இன்று அரசியலின் மையப்புள்ளி விஜய் தான். நமது தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு ஒன்பது மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த கணக்கு நாம் அதிகப்பூர்வமாக மக்களுக்கு அறிவித்தது. ஆனால், நம் தலைவர் விஜயின் உழைப்பும் உங்களுடைய அர்ப்பணிப்பும் மக்களோடு நமக்கு இருக்கும் பாசம் 30 ஆண்டுகளை தாண்டி தனி வரலாறு இது.
இது அனைத்திற்கும் அடித்தளம் ஒரு மனிதர் மட்டும் தான் அவருடைய வழிகாட்டுதலும் தியாகமும் மிகவும் பெரியது. 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த மண்ணோடும் மக்களோடும் ஒவ்வொருவரின் வீட்டுப் பிள்ளையாகவும் மாறியுள்ளவர்தான் நம் தலைவர் விஜய். நம்முடைய எதிரிகள் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை. யாரும் விஜயை எளிமையாக அசைத்து பார்க்க முடியாது. ஏனென்றால் இவர் மக்களின் நம்பிக்கை. தாய்மார்களின் நம்பிக்கை. தமிழ் மண்ணின் நம்பிக்கை" என்று பேசியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ