தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?

கரூர் சோக நிகழ்விற்கு பிறகு, சற்று தொய்வடைந்திருந்த தவெக-வின் தேர்தல் பணிகள், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2025, 03:07 PM IST
  • தவெக விற்கு பொதுச்சின்னம்
  • டெல்லி விரைந்தார் ஆதவ் அர்ஜுனா!
  • தீவிரமடையும் 2026 தேர்தல் களம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு முக்கிய படியாக, கட்சிக்கு பொதுவான தேர்தல் சின்னத்தை பெறுவதற்காக, தவெக-வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, டெல்லிக்கு விரைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திடீர் பயணம், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமாஅரசின் முக்கிய அறிவிப்பு

பொதுச்சின்னம் ஏன் முக்கியம்?

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, பொதுவான சின்னத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஒரே சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது, வாக்காளர்கள் மத்தியில் கட்சியை எளிதில் அடையாளம் காண உதவும். இது, புதிய கட்சிகளுக்கு கிடைக்கும் ஒரு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, தவெக தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நவம்பர் 12ம் தேதி முதல், பொது சின்னத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்பதால், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லியில் நடப்பது என்ன?

ஆதவ் அர்ஜுனா, தனது டெல்லி பயணத்தின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, பொதுச்சின்னம் கோரி முறைப்படி மனு அளிக்க உள்ளார். ஒரு கட்சி தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். அதிலிருந்து, வேறு எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படாத ஒரு சின்னத்தை, தேர்தல் ஆணையம் அந்த கட்சிக்கு வழங்கும். தற்போது தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகம் தங்களது விருப்ப சின்னங்களாக சிலவற்றை தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் விசில், கிரிக்கெட் பேட், கப்பல், ஆட்டோ மற்றும் பேருந்து ஆகியவை முன்னுரிமை பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. இளைஞர்களை கவரும் வகையிலும், அடித்தட்டு மக்களை எளிதில் சென்றடையும் வகையிலும் இந்த சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவால்களும், எதிர்பார்ப்புகளும்

பொதுச்சின்னம் பெறுவதில் சில சவால்களும் உள்ளன. தவெக கேட்கும் சின்னங்கள், ஏற்கனவே சுயேட்சை சின்னங்களாக இருக்கலாம் அல்லது வேறு கட்சிகளால் கேட்கப்பட்டிருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், தங்களுக்கு விருப்பமான சின்னத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், கரூர் சோக நிகழ்விற்கு பிறகு, சற்று தொய்வடைந்திருந்த தவெக-வின் தேர்தல் பணிகள், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. கட்சியின் நிர்வாக குழு மற்றும் சிறப்பு செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆதவ் அர்ஜுனாவின் இந்த டெல்லி பயணம், 2026 தேர்தல் களத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு தவெக ஒரு பெரிய போட்டியாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க:  மீண்டும் உருவாகும் 'புயல்'.. பிச்சு உதறபோகும் மழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய பாயிண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News