புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை பாஜக மூத்த தலைவர் எச் ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, இன்றைய தினம் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கருடைய ஜென்ம தினம். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் தேர்தலிலே டாக்டர் அம்பேத்கர் பாராளுமன்றத்திற்கு போய் விடக்கூடாது என்பதிலே மிக கருத்தாக இருந்து. டாக்டர் அம்பேத்கரை காங்கிரஸும் கம்யூனிஸ்டும் தோற்கடித்தார்கள். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எஸ்யே காங்கே நீங்கள் கம்யூனிஸ்டுக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை அம்பேத்கருக்கு போடாதீங்க என்று சொன்னார்.
மேலும் படிக்க | அண்ணாமலையின் பாணியை கையில் எடுத்த நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் இருக்கிறது, ஈவேரா பெரியாருக்கு நினைவிடம் இருக்கிறது, அம்பேத்கருக்கு ஏதாவது நினைவு சின்னம் இந்த திராவிட ஆட்சி கட்டியிருக்கிறதா? இல்லை. இவர்கள் டாக்டர் அம்பேத்கரின் விரோதிகள், ஆனால் இப்போது டாக்டர் அம்பேத்கரை ஆதரிப்பது போல் அவருக்கு மரியாதை செலுத்துவது போல் ஒரு உருவகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்ப சமீபத்தில் வக்பு போர்டு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அது சட்டமாக இருக்கிறது. தமிழகத்தில் திருச்சியில் அதன் பக்கத்தில் இருக்கின்ற திருச்செந்தூரிலே 1300 ஆண்டுகளுக்கு முன்பாக பரந்தகச் சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில் வக்பு சொத்து என்று அபகரிக்கப்பட்டது.
நமது முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார், ஏன் என்று தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா அதே போல வேலூரில் ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூரில் 1933 நீதிமன்றத்தின் மூலமாக 2 அன்னியப் பெரியோர் பெற்ற சொத்து இன்று பங்கு சொத்து என்ற டிக்ளர் பண்ணி இருந்தார்கள். அதனை அங்கே சென்று பேசி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்த 52 குடும்பங்கள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு கோயில் சொத்துக்கள் வக்பு சொத்துக்கள் என்று அபகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருக்கு அவர் குடும்பத்தின் மீதும் கட்டுப்பாடு இல்லை அவரது கட்சியின் மீதும் கட்டுப்பாடு கிடையாது. அரசாங்கத்தின் மீதும் கட்டுப்பாடு இல்லை. அவருக்கு ஒன்றும் தெரியாது.
பொன்முடி என்று ஒருவர் அமைச்சராக இருக்கின்றார். அதை கரோக்கீழாகச் சொன்னால் தங்க முடி என்று என்று சொல்லலாம் அல்லது வேறு விதமாக கூட சொல்லலாம் அது திருக்குறளில் வந்துள்ளது. வைணவம் என்றால் நின்று கொண்டு போடுவது என்று ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். அந்த அமைச்சரை ஏன் ஸ்டாலின் அரசாங்கம் இன்னும் டிஸ்மி செய்யவில்லை என்று கேட்கிறேன். காரணம் இரண்டு பெரிய இந்து சமுதாயத்தின் கிளைகள் சைவமும் வைணவமும். அந்த இரண்டு கிளைகளையும் விலை மாதர்களை அடையாளப்படுத்தி கேவலமாக பேசியிருக்கிற அமைச்சரை ஏன் பதவியில் இருந்து இன்னும் நீக்கவில்லை? அவரை கட்சியின் பொறுப்பில் இருந்து எடுத்தால் பத்தாது.
பாஜகவின் விதிகளின்படி ஒரு தலைவரின் காலகட்டம் 3 ஆண்டுகள் அதன் பிறகு இருந்தால் இருக்கலாம். 11 மாநில தலைவர்களோடு நான் பதவி வகித்திருக்கிறேன். பல தலைவர்கள் இதுபோல மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அன்றைக்கெல்லாம் ஊடகத்துறையினர் யாரும் இதைப் பற்றி ஏன் கேட்கவில்லை. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு தூக்கம் வர மாட்டேங்குது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம். தமிழக வெற்றிக் கழக தலைவர் வகுப்பு திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எச். ராஜா, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இந்து விரோதி. விஜயின் உண்மையான பெயரை சொன்னதை நான் தான். வக்பு சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவருமே இந்து விரோத தீய சக்திகள் என்று தெரிவித்தார்.
மேலும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! உடனே அமலுக்கு வரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









