Tamil Nadu Latest News Updates: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tamil Nadu News: 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தமிழ் என்று வந்தால் அதில் சாதியை பார்க்கிறார்கள், மதத்தை பார்க்கிறார்கள். ஏன் பாரதி, கம்பனை கொண்டாட மறுக்கிறீர்கள்? அதுவும் தமிழ் தானே, தமிழில் கூட வேற்றுமையை விதைத்தவர்கள் நீங்கள்...
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
Paid floral tributes to Pavendar #Bharathidasan on his Birth Anniversary. pic.twitter.com/cAV2wso9So
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 29, 2025
முதல்வர் சொல்கிறார், மத்திய அரசு பல தடைகளை கொண்டு தடுத்துக் கொண்டிருக்கிறது என்று... என்ன தடை என்று நான் கேட்கிறேன்?. தினம், தினம் மத்திய அரசு இவர்களை ஆட்சி நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது போல மாயை தோட்டத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுகவைச் சார்ந்த அமைச்சர்கள் ஏறக்குறைய 9 பேர் மேல் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது, யார் அரசாங்கத்திற்கு தடையாக இருக்கிறார்கள்,?
இவர்கள் சுரண்டிய பணம் யாருடையது.
Tamil Nadu News: திமுக ஆட்சியில் தான் ஜாதிய வேற்றுமை
எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் இருந்து நிதி எங்கே? என்று கேட்கிறார்கள். இவர்கள் சுருட்டிய பணத்தை எடுத்துப் பார்த்தால் அதைவிட அதிகமாக இருக்கும். அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது, நீங்கள் ஆட்சிக்கு வருவதே மக்களின் பணத்தை சுரண்டுவதற்காக தான். இதுவரை எந்த ஆட்சியிலும் குடிதண்ணீரில் மலம் கலக்கவில்லை, திமுக ஆட்சியில் குடிதண்ணீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளிடம் ஜாதியை வேற்றுமை இதுவரை இல்லை, திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளிடம் ஜாதியை வேற்றுமை விதைக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu News: மத்திய அரசு என்ன தடையை கொண்டுவந்தது?
எந்த தடையும் நாங்கள் தாண்டுவோம் என்று முதல்வர் கூறி இருக்கிறார். மத்திய அரசு எந்த தடையும் கொண்டு வரவில்லை, தடையை மாநில அரசு தான் கொண்டு வந்துள்ளது. இரவில் நிறைய அணில்கள் ஓடுகிறது என்று நினைக்கிறேன். நேற்று எங்கள் வீட்டில் மட்டும் மூன்று முறை மின்தடை ஏற்பட்டது. பகலில் ஓடிக்கொண்டிருந்த அணில் தற்பொழுது இரவில் ஓடுகிறதா? எந்தத் தடையும் நாங்கள் தாண்டுவோம் என்கிறீர்கள் நீங்கள் மின்தடையை கூட தாண்டவில்லை.
Tamil Nadu News: மின்தடையை முதலில் தாண்டுங்கள்
மின் துறை ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்கள் வருவதில்லை, துறை ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்கிறார்கள். மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை, அரசாங்க ஊழியர்கள் பற்றாக்குறை. முதலில் மின்தடையை தாண்டுங்கள், பின்பு அனைத்து தடைகளையும் தாண்டுகிறீர்களா என்று பார்ப்போம். இரவில் எந்த அணில்கள் ஓடுகிறது என்று கண்டுபிடித்து முதலில் மின்தடையை சரி செய்யுங்கள்.
Tamil Nadu News: காங்கிரஸ் கட்சிக்கு அடிமையான திமுக
1969ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ராஜமன்னார் கமிட்டியை கொண்டு வந்தார்கள், அதை அவர்கள் பின்பற்றவில்லை. திமுக காங்கிரஸ் கட்சிக்கு அடிமை ஆகிவிட்டது, ராஜமன்னார் கமிட்டி சொன்னதை நீங்கள் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக இருந்தீர்கள், இன்றைக்கும் காங்கிரசுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
Tamil Nadu News: திமுக கூட்டணியில்தான் பிரச்னை
துணை முதல்வர் செல்வப் பெருந்தகை என்று போஸ்டர் ஒட்டினால் உடனடியாக கிழிக்கப்படுகிறது, திருமாவளவன் சுதந்திரமாக ஒரு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அழுத்தப்படுகிறார், அவர்கள் (திமுக) கூட்டணியில்தான் பிரச்சனை.
எங்கள் (அதிமுக - பாஜக) கூட்டணி பலமாக இருக்கிறது. விஜய் இப்பொழுதுதான் பூத் கமிட்டி கூட்டத்திற்கு இறங்கி வந்திருக்கிறார். அதற்குப் பின்பு அவருடைய அரசியல் நகர்வு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்" என்றார்.
மேலும் படிக்க | இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்து தான் - ஹெச் ராஜா
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு எம்பி பதவி இல்லை! வேறு ஒருவருக்கு கொடுத்த பாஜக!
மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ