மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தைக்காக உருகிய தமிழசை சௌந்தரராஜன்!

Kumari Ananthan passes away: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார்.

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2025, 06:56 AM IST
  • குமரி அனந்தன் மரணம்!
  • வயது மூப்பின் காரணமாக மரணம்.
  • தமிழசை சௌந்தரராஜன் உருக்கம்.
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தைக்காக உருகிய தமிழசை சௌந்தரராஜன்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார். 93 வயதாகும் அவர் வயது முதிர்வு காரணமாக காலமாகி உள்ளார். இவர் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக நீண்ட ஆண்டுகளாக தீவிர அரசியல் இருந்து ஓய்வில் இருந்தார் குமரி அனந்தன். சிறுநீர் தொடர்பான பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார், இந்நிலையில் திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிங்க: கழிவறைக்கு காலனி பயன்படுத்த கூடாது! மீறினால் தண்டனை - அரசு பள்ளியில் நடக்கும் அவலம்!

ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை. குமரி அனந்தன் தமிழ்நாடு அரசின் தகைசால் விருதினை வென்றுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். குமரி அனந்தனின் மறைவிற்கு அரசியல் கட்சியை நிர்வாகிகளும் பொதுமக்களும் தங்களது அஞ்சலியை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டில் குமரி ஆனந்தன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். தனது தந்தையின் மறைவிற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அப்பாவிற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்... அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக... தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு... தமிழிசை என்ற பெயர் வைத்து... இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது.... வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று... சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்... இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்... சீராக வாழ்வதைக் கண்டு... பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்... என்றும்.  .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக  அரசியலில்..

பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர்  இன்று தமிழோடு காற்றில்  கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.... மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று  நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று... உறுதியோடு... உங்களை வழி அனுப்புகிறோம்... உங்கள் வழி உங்கள் வழியில்...... நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல... நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்... போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்... நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்....

மேலும் படிங்க: இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆதரவாக விசிக உள்ளது - மஜக பொதுச்செயலாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News