)
Tamilisai Soundararajan : திண்டுக்கல்லில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டிற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த தெலுங்கானா முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து அவர் பேசுகையில்:
"நாம் எல்லோரும் கொண்டாட கூடிய நிகழ்ச்சி இன்று சாயங்காலம் 5 மணிக்கு பாரத பிரதமர் நம்முடன் உரையாற்ற உள்ளார் மிகப்பெரிய பரிசு கொடுக்க உள்ளார் பாக்கெட்டெல்லாம் நிரம்பப் போகிறது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்றைய காலகட்டத்தில் பாஜக அதிமுக கூட்டணி பலமாக உள்ளது ஆனால் இந்தியா கூட்டணி காங்கிரஸ், திமுக,விடுதலை சிறுத்தைகள் ரெண்டு மூணு கட்சிக்கு அங்கீகாரம் போச்சு மக்கள் நீதி மையத்திற்கு அங்கீகாரம் இல்லை கொங்கு கட்சிக்கு அங்கீகாரம் இல்லை, அதை எல்லாத்தையும் விட எங்களை பார்த்து பயந்து பயந்து போனத விட இன்னைக்கு அவங்க கூட்டணி விளவிளத்து போய்விடும் போல இருக்கு காங்கிரஸ் சார்ந்தவர்கள் கூட்டணியில் இடம்வேண்டும் மந்திரி சபையில் இடவேண்டும் அதிகார பகிர்வு வேண்டும் என்று சொல்கிறார் திருமாவளவன் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்து விட்டார் கம்யூனிஸ்ட் உழைப்பாளர்கள் என்று சொல்லி அவர்களை பார்ப்பதில்லை பெட்டி பாம்பாக அடங்கி விட்டார்கள் தேர்தல் வர வர தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும் இந்தியா கூட்டணி உதிரும். இதுதான் எனது கணக்கு"
விஜய் குறித்து..
தொடர்ந்து பேசிய அவர், “அது மட்டும் அல்ல தம்பி விஜய் பெரிய கூட்டத்தை கூட்டி வருகிறார் அவரிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன் கொஞ்சம் ஸ்கிரிப்ட் எழுதி தர தம்பி கிட்ட கொஞ்சம் சரி பார்த்து எழுதிக் கொடுக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன் மீனவர்களை பற்றி ஒன்று சொல்லி இருக்கிறார். பாரத பிரதமர் வந்த பின்பு 3,700 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் பாரதிய ஜனதா ஆட்சி வந்த பின்பு தூக்கு தண்டனையில் இருந்து ஆறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரைக்கும் யாரும் உயிரிழக்காத வகையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் அதே மாதிரி நாகப்பட்டினத்தில் போய் ரயில் தொழிற்சாலை இருந்ததை காணோம் என்று ஒன்று வசன கர்த்தாவை கொஞ்சம் மாத்தணும் ஆனால் 75 ஆயிரம் பெட்டி பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையில் வந்தே பாரத் பெட்டி செய்யப்பட்டுள்ளது முதலில் மெட்ரோ ரயில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிவிட்டது ஆனால் 75 ஆயிரம் பெட்டி செய்தது மட்டும் இல்லாமல் 65 வந்தே பாரத் இந்திய ரயில்வே தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தம்பி ஸ்க்ரிப்ட் ரைட்டர் சரி பார்க்கணும் சந்தேகமிருந்தால் எங்கள மாதிரி உள்ளவர்களிடம்கேட்டுக் கொள்ளலாம். 25 வருடமாக திரைத்துறையில் இருக்கிறீர்கள் திடீர்னு அரசியலுக்கு வந்தவுடன் என்னென்று புரியவில்லை சரியா எழுதி கொடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
விஜய் கூறியதில் ஒன்றே ஒன்று அவருடன் உடன் படுகிறேன் முதலமைச்சர் வெளிநாட்டில் முதலீட்டை ஈர்க்கச் சென்றாரா? முதலீடு அளிக்க சென்றாரா என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு நிச்சயமாக திமுக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்லிக்கொண்டு கலர் கலராக சட்டையை போட்டு சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார். சூட்டிங்கில் இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் அரசியலில் இருக்கும் முதலமைச்சர் ஷூட்டிங்கில் இருக்கிறார். இதனால் தவிர்க்கணும்னு எதார்த்தமான அரசியல் ஆக இருக்க வேண்டும்.
விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்கிறோமே இந்த சுற்றுப்பயணத்தை பொறுத்த மட்டில் வேறு வேறு மாதிரி பாஜகவை எதிர்ப்பதற்கு அர்த்தமுள்ள கிட்னி திருட்டு காக நான்கு அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு போக வேண்டும் என்றால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகிறார்கள் இது போன்ற பிரச்சனைகளை விஜய் எடுத்துப் பேச வேண்டும் மக்களுக்காக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அதற்கு எதிராக போராட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா பார்த்துவிட்டு முகத்தை மூடி சென்றது ஏன் என மாணிக்கம் பேசியது குறித்த கேள்விக்கு:
தமிழிசை மாணிக் தாகூரை பற்றி விருதுநகர் பகுதியில் கேளுங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்துள்ளார் என்று. ஒருவேளை நான் முகத்தை தொடச்சனா கேமராவை பார்த்து முகத்தை மறைச்சிட்டாங்க என்று சொல்லிருவீங்க அமித்ஷா பார்க்க போறோம் என்று அண்ணன் சொல்லியாச்சு அதுக்கப்புறம் முகத்தை மறைக்கிறார் என்று சொல்லுவது தவறு.
ஆமை புகுந்த வீடுவிளங்காது என காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு:
செல்வபெருந்தகை எங்களை பற்றி கூறுவதற்கு முன் அவங்களுடைய நிலை என்ன என்பதை கூற வேண்டும் செல்வப் பெருந்தகை ஸ்டாலினை போய் பார்ப்பாரா திருமாவளவன் போய் ஸ்டாலினை பார்ப்பாராம். அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அண்ணன எடப்பாடி அமித்ஷாவை பார்த்தால் அமித்ஷாவை பார்த்து விட்டார் என்கிறார்கள். கூட்டணி இருந்தால் தலைவர்களை பார்க்கத்தான் செய்வார்கள் இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்று தெரியவில்லை ரெண்டு கூட்டணி தலைவர்கள் பேசுவது இயல்பு செல்வப்பெருந்தகையிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆணவ படுகொலையை எதிர்க்கிறேன் என்று சொல்கிறீர்கள் கூட்டணி விட்டு வெளியே வருகிறீர்களா? உங்களுடைய மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி சாய்க்கப்பட்டார் குற்றவாளிகளை கண்டுபிடித்தீர்களா அதை கேட்க துப்பில்லை இந்த ஆட்சியில் என்றார்.
விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் காலில் செருப்புடன் கோயில் மீது ஏறியது குறித்த கேள்விக்கு:
அதை நானும் பார்த்தேன் தம்பி விஜய் கூட வேலை கையில் வாங்கும் போது காலணியை கழட்டி இருக்க வேண்டும் சிலது ஆரம்ப காலத்தில் வரும் போது தெரியவில்லை என்று நினைக்கிறேன் மக்கள் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து அவரும் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் அவரது தொண்டர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ